குட் நியூஸ்..! மும்பை வந்தடைந்தது முதல் கச்சா எண்ணெய் கப்பல்! இனி பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது..!

மும்பை துறைமுகம்
மும்பை துறைமுகம்
Published on

இந்தியா முழுவதும் LPG தட்டுப்பாடு எழுந்ததால் மக்கள் பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு வரும் என்ற அச்சம் காரணமாக அதிகமாக பெட்ரோல் நிரப்புவதால் சில பெட்ரோல் பங்குகளில் அதிகளவு கூட்டம் காண முடிகிறது.

உண்மையில் பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளதா? என்றால் இல்லை என்பது தான் பதில்..

சமையல் எரிவாயு தட்டுப்பாடு அச்சம் ( panic buying) காரணமாக மக்கள் அதிகளவில் பெட்ரோலை ( fuel) சேமிக்க தமிழ்நாட்டில் சில பெட்ரோல் பங்குகளில் மக்கள் அதிகளவில் குவிவதால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடைக்கவில்லை/தீர போகிறது எனும் உண்மைக்கு மாறான தகவல் பரவிவருகிறது. மேலும் போர் காரணமாக crude oil supply பாதிக்கலாம் என்றும் அதனால் பெட்ரோல் விலை (fuel price) உயரும் என்றும் பேசப்படுகிறது.

மத்திய அரசின் தகவல்படி,பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் பங்குகளில் சப்ளை சீராகவே (supply normal-)உள்ளதாவும் மேலும் பொதுமக்களின் அத்யாவசிய தேவையான பெட்ரோல் போன்றவைகளின் நிலையை அரசு கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக "பயம் வேண்டாம் . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 7000 பெட்ரோல் பங்குகளில் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விநியோகமும் கட்டுப்பாடுகள் இன்றி சீராக உள்ளது. பொதுமக்கள் பயத்தில் அதிக அளவில் வாங்கி செல்வதால் தான் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகி உள்ளது " என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முரளி அளித்த பேட்டியில் கூறியுள்ளது எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் இருக்கும் பொது மக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

அத்துடன் ஈரான் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஹேர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதால் இந்தியாவின் மும்பை துறைமுகத்துக்கு வந்த எரிபொருள் எண்ணெய் கப்பலால் எரிவாயு தட்டுப்பாடு குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுருக்கமாக சுமார் 50 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பு ( fuel stock) உள்ளதாக இந்தியாவின் தற்போதைய பெட்ரோல் (Petrol) மற்றும் எரிபொருள் கையிருப்பு (Fuel reserves) குறித்து சமீபத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியே ஏதேனும் மாற்றம் வந்தால் தற்காலிகமாக பெட்ரோல் விலை சிறிது கூடும் என்றும் தட்டுப்பாடு வரும் வாய்ப்பு குறைவு என்பது வல்லுநர்களின் கருத்து.

போர் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அளவிலான எரிவாயு போன்ற பிரச்சனைகளை மக்களான நாம்தான் சரியான வழிமுறைகளால் தீர்வை காண முடியும் என்கின்றனர் வல்லுநர்கள், உதாரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் போன்றவைகளை சிக்கனத்துடன் பயன்படுத்துவது இந்த நெருக்கடியான நேரத்தில் நமது கடமை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : எண்ணெய் கப்பல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஈரான் : இந்திய மாலுமி ஒருவர் பலி..!!
மும்பை துறைமுகம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com