இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விடுதலை!

தாயகம் திரும்பும் மீனவர்கள்!
Fisher man
Fisher man

சமீபத்தில் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். தற்போது அந்த 20 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வர மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது சில மீனவர்கள் இலங்கையின் மன்னார்- கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த சமையத்தில் அவர்களைப் பார்த்து இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி விரைந்தனர். இந்திய மீனவர்கள் எல்லைத்  தாண்டி வந்து மீன் பிடித்தனர் என்று கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமீபத்தில் மட்டும் இலங்கை கடற்படையினர் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையினருக்கும் ஒரு வழக்கமாகிவிட்டது. அதேபோல் மீனவர்களைக் காப்பாற்றுவது இந்திய அரசுக்கும் ஒரு வழக்கமாகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
நிழற்குடையில் நீரூற்று.. அதிகாரிகள் சஸ்பெண்ட்!
Fisher man

அந்தவகையில் பிரதமர் மோடி அந்த 23 மீனவர்களை விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார். இலங்கை அரசும் உடனே இந்த வழக்கை நடத்தியது. 23 மீனவர்களை உள்ளூர் போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில் 23 மீனவர்களில் 20 மீனவர்களுக்கு விடுதலை என்ற உத்தரவை இலங்கை அரசு கொடுத்தது. மீதமுள்ள மூன்று மீனவர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்ற செய்தி வெளியாகிவுள்ளது. மேலும் இவர்கள் விடுதலை ஆவதற்கு பிரதமர் மோடித்தான் காரணம் என்று மீனவ மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com