நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Dog
Dog
Published on

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் வெறிநாய் கடித்ததில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபக்காலமாக நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் கடிப்பது வழக்கமாக வருகிறது. கைக்குழந்தைகளை கூட இந்த வெறிநாய்கள் கடிப்பது, மிகவும் கொடூரமான விஷயமாக மாறியுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் வருகின்றன. ஆனாலும்கூட, இந்த நாய்க்கடி செய்தி தொடர்க்கதையாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா், நடுவகுறிச்சி, மேலமடம் ஆகிய கிராமங்களில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த நாய்கள் நடந்து வருவபவர்களையும் வண்டியில் போவோர்களையும் அச்சுறுத்தி வந்தது. இந்தநிலையில்தான் ஒரு நாய் சுமார் 20 பேரை விரட்டி கடித்துள்ளது.

பாதிக்கப்பட்டவா்கள் புதியம்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொதுமக்கள் புகாரைத் தொடா்ந்து புதியம்புத்தூா் ஊராட்சி தலைவி பழனிச்செல்வி, ஊராட்சி நிா்வாகம் மூலம் மதுரையில் இருந்து நாய் பிடிப்பவா்கள் வரவழைக்கப்பட்டு, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
News 5 – (27-07-2024) கூகுள்கு போட்டியாக ஆப்பிள்!
Dog

எப்போதும் நாய்க்கடி செய்தி எந்த பகுதியிலிருந்து வருகிறதோ, அந்தப் பகுதியில் மட்டுமே நாய்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வெறிநாய்களின் தொல்லை அதிகமாகத்தான் இருந்து வருகிறது. ஆகையால், இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பே நாய்களைப் பிடிக்க வேண்டும். குறிப்பாக வெறிநாய்களை தேடிப் பிடித்தே ஆக வேண்டும் என்ற சூழல் நிழவி வருகிறது. அப்படியில்லையென்றால், நாய்க்கடியால் உயிர்பலி தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com