Flood
Flood

ராஜஸ்தானில் பெய்த கனமழையால் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலி!

Published on

ராஜஸ்தானில் அதிகளவு மழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. கேரளா மாநிலத்தில் மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு ஏறதாழ 350 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஜெய்ப்பூர், சவாய், மாதோபூர், கரௌலி ஆகிய இடங்களில் இருக்கும் கனோடா அணையில் வெள்ளம் நிரம்பி வழிகிறது. இதனால், அந்த இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஜெய்ப்பூர் வெள்ளத்தில் சிக்கி ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். உடல்கள் கிடைக்காததால், தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் பார்த்பூரின் ஸ்ரீநகர் கிராமத்தில் உள்ள ஆற்றில் அதிகளவு நீர் வந்துகொண்டிருந்த சூழலில், ஆற்று நீரில் மூழ்கி  7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் மற்றொரு நிகழ்வாக ஆற்று  வெள்ளத்தில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின்  சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு!
Flood

இதனையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அவசர கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, “மாநில மக்கள் அனைவரும் நீர்நிலைகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், மழையின் போது மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையே உள்ள தூரத்தை பராமரிக்கவும், மழையின் போது கட்டிடங்களில் கட்டப்பட்ட அடித்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.”  என்று பேசியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலபடுத்துமாறு பேரிடர் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com