20 ஆண்டுகள் வேலையில்லாமல் சம்பளம்… பெண் போட்ட விசித்திர வழக்கு!

Salary without Work
Salary without Work

பாரிஸில் கடந்த 20 வருடங்களாக எந்த வேலையும் கொடுக்காமல் ஒரு நிறுவனம் சம்பளம் தருவதாக, சம்பளம் வாங்கிய பெண் ஒரு விசித்திர வழக்கு போட்டுள்ளார். இதுதான் ‘யாருமா நீ…?’ என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வழக்கத்தில் நாம் பார்க்காத விஷயங்கள் நடக்கும்போது நமக்கு மிகவும் வினோதமாகத்தான் இருக்கும். பொதுவாக அனைவருமே, வேலையில்லாமல் சம்பளம் வாங்குவதென்றால், கண்களை மூடிக்கொண்டு அந்த வேலைக்குச் செல்வார்கள். அது எத்தனை வருடங்களானாலும் சரி. ஆனால், சிலர் வேலையில்லாத அந்த சம்பளத்தை பிச்சையாக கருதி, தனது மரியாதையுடன் இணைத்துப் பேசுவார்கள்.

ஒருவேளை இந்த பெண்ணும் சுயமரியாதை பற்றி யோசித்திருக்கிறார் போலும். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த 1993ம் ஆண்டு இரு டெலிகாம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் லாரன்ஸ் வான் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தெரிந்தே அந்த நிறுவனம் லாரன்ஸ் வானுக்கு ஏற்ற வேலையைத் தொடக்க காலத்தில் வழங்கி உள்ளது. ஆனால், 2002ம் அண்டு லாரன்ஸ் வேறு பகுதிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவருக்கு எந்த வேலையும் அந்த நிறுவனம் கொடுக்கவில்லை. பல வருடங்களாக வேலை செய்யாமல், சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

இதனிடையே லாரன்ஸ் வான் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயர் கடந்த 2013-ல் ஆரஞ்ச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக பெயர் மாறியது போல் நிறுவனமும் மாறி தனக்கு பணி வழங்கும் என்று காத்திருந்த லாரன்ஸ்வானுக்கு அதன்பிறகும் எந்தப் பணியும் வழங்கப்படவில்லை.

கேட்டுக் கேட்டுபார்த்த அவர் ஒரு கட்டத்தில் வாசன்ஹோவ் கோர்டில் தனது நிறுவனமான ஆரஞ்சுக்கு எதிராக வழக்கே போட்டுவிட்டார். அதில் லாரன்ஸ் வான், எனக்கு கடந்த 20 ஆண்டுகளாக வேலை கொடுக்காமல் முழுச்சம்பளத்தையும் வழங்கி இருக்கிறது ஆரஞ்ச் நிறுவனம். இதன் மூலம் எனக்கு தார்மீக துன்புறுத்தலை நான் வேலை செய்யும் நிறுவனம் தருகிறது என்றும், இதனால் தொழில்முறை அனுபவத்தை தான் இழக்க நேரிடும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
ரஷ்யா: வழிபாட்டுத் தளங்களை தாக்கிய பயங்கரவாதிகள்… 14 போலீஸார் பலி!
Salary without Work

இதற்கு மறுப்புத்தெரிவித்த நிறுவனம், லாரன்ஸின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்துப் பார்த்தோம். ஆனால், அவரின் மருத்துவ விடுப்பு அதனைக் கடினமாக்கிவிட்டது என்றது.

இந்த விசித்திரமான வழக்கு தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. ஆனாலும் இது ரொம்ப ஓவர்ப்பா…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com