"பாக்கியா வரக்கூடாது" கடுப்பான ராதிகாவிற்கு கிடைத்த பரிசு... பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்
Published on

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் கதையை பார்க்கலாம்.

1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்று கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டி தவித்து கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகியுள்ளார்.

இந்த விஷயம் ஒட்டு மொத்த வீட்டிற்கு தெரிய வர, இது எனது வீடு அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள் என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டு போவதை தாங்கி கொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழிவாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் வீட்டிற்கு உடன் அழைத்து செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள் தான். இதனால் வீட்டில் ஒழுங்கா சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி முடியாமல் போய்கிறார். தொடர்ந்து நேற்றைய எபிசோட்டில் சாப்பிடாமல் ஈஸ்வரி மயக்கம் போட இன்று அவர் மீண்டும் நன்றாக ராதிகா வீட்டிற்கே வருகிறார். இனிமேல் ஈஸ்வரி இங்கு வரமாட்டார் என்று நினைத்து கொண்டிருந்த கமலா, ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்கள்:
முதல் நாளே கோடியில் வசூல் அள்ளிய மகாராஜா... எவ்வளவு தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல்

மீண்டும் நம்பி வந்த ஈஸ்வரியை நன்றாக பார்த்துக்க வேண்டும் என நினைத்த கோபி, 3 நேரம் தாயை பார்த்து பார்த்து கவனித்து கொள்கிறார். தொடர்ந்து பாக்கியாவிடம் சாப்பாடு கேட்ட ஈஸ்வரியால், தினசரி பாக்கியா ராதிகா வீட்டிற்கு வருகிறார். அந்த வகையில் இன்றைய எபிசோட்டிலும் பாக்கியா சமைத்து கொண்டு வர, கடுப்பான ராதிகா மாமியாரிடம் சண்டைக்கு சென்றார். நீ மட்டும் பாக்கியா வீட்டிற்கு வந்த என கேட்டு ஈஸ்வரியும் கத்திவிடுகிறார்.

தொடர்ந்து கோபியிடம் சென்று சண்டையிட்ட ராதிகாவிற்கு மூக்கு உடைப்பட்டதே மிச்சம். கோபியும் தாயிற்கும், பாக்கியாவிற்கும் சப்போர்ட் செய்து ராதிகாவை திட்டி அனுப்புகிறார். இதனால் மனமுடைந்த ராதிகா கடுப்பாகி மூலையில் இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com