2026-ல் அரசு ஊழியர்களுக்கு டபுள் கொண்டாட்டம்: மொத்தம் 98 நாட்கள் விடுமுறை..!

2026 holiday list
2026 holiday listsource:thesouthafrican.com
Published on

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வருகிற 2026 ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, கீழ்க்காணும் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. இவை தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும். அதன்படி விடுமுறை நாட்களின் முழு விபரம் பின்வருமாறு:

* ஆங்கில புத்தாண்டு- ஜனவரி 1 (வியாழன்)

*பொங்கல் - ஜனவரி 15 (வியாழன்)

* திருவள்ளுவர் நாள்- ஜனவரி 16 (வெள்ளி)

* உழவர் திருநாள்- ஜனவரி 17 (சனி)

* குடியரசு நாள் - ஜனவரி 26 (திங்கள்)

* தைப்பூசம்- பிப்ரவரி 1  (ஞாயிறு)

*தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 19 ( வியாழன்)

*ரம்ஜான் - மார்ச் 21 (சனி)

*மகாவீரர் ஜெயந்தி - மார்ச் 31 (செவ்வாய்)

*வங்கிகள் ஆண்டு கணக்கு - ஏப்ரல் 1  (புதன்)

*புனித வெள்ளி - ஏப்ரல் 3 (வெள்ளி)

*தமிழ்புத்தாண்டு - ஏப்ரல் 14 (செவ்வாய்)

*மே நாள் - மே 01(வெள்ளி)

*பக்ரீத் - மே 28 (வியாழன்)

*மொகரம் - ஜூன் 26 (வெள்ளி)

*சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15(சனி)

*மிலாதுநபி - ஆகஸ்ட் 26 (புதன்)

*கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 04 (வெள்ளி)

*விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 14 (திங்கள்)

*காந்தி ஜெயந்தி - அக்டோபர் 02 (வெள்ளி)

*ஆயுத பூஜை - அக்டோபர் 19 (திங்கள்)

*விஜயதசமி - அக்டோபர் 20 (செவ்வாய்)

*தீபாவளி - நவம்பர் 08 (ஞாயிற்றுக்கிமை)

*கிருஸ்துமஸ் - டிசம்பர் 25 (வெள்ளி)

தமிழ்நாடு அரசு 2026க்காக 24 பொது விடுமுறைகள் அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறைகள் ஏற்கனவே ஞாயிறு அல்லது 2வது/4வது சனி அன்று வருவதால், அவை மேலே கணக்கில் சேர்ந்துவிடும். அதனால், ஞாயிறு அல்லது 2வது/4வது சனி அல்லாத நாட்களில் வரும் கூடுதல் வங்கி விடுமுறைகள் மட்டும் தனியாக கணக்கிடப்படுகின்றன.இவ்வாறு கூடுதலாக வரும் விடுமுறைகள் = 22 நாட்கள்

இந்த விடுமுறைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கம்போல பொது விடுமுறையாகவே இருக்கும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 52 ஞாயிறு + 24 அரசு விடுமுறை, என 76 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன.மேலும் அரசு அலுவலகங்களுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 52 ஞாயிறு + 22 +24 (2வது மற்றும் 4வது சனிக்கிழமை) அரசு விடுமுறை, என 98 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன.

இதையும் படியுங்கள்:
2025-ல் இந்தியர்கள் கூகுளில் என்ன தேடி இருக்காங்க தெரியுமா..? இதை கேட்டா நீங்க அசந்து போவிங்க..!
2026 holiday list

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com