துபாயிலிருந்து சென்னை வந்திறங்கிய 217 இந்தியர்கள் - கண்ணீர் மல்க வரவேற்ற குடும்பத்தினர்..!

dubai to chennai
dubai to chennaiimage source: https://www.etamilnews.com/
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்றிரவு முதல் ஒரு சில விமானங்களை மட்டும் இயக்கி வரும் துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பேர் இன்று அதிகாலை சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில் துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். வான்வெளியின் சூழலைப் பொறுத்து துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் நேற்றிரவு முதல் ஒரு சில விமானங்களை இயக்கி வருகிறது. இன்று அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பேர் வந்திறங்கினர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று முதல் மஸ்கட் விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது. டெல்லி, திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, மும்பையில் இருந்து மஸ்கட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை தொடங்குகிறது. பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
டெல்லி டூ சென்னை: கூட்டணி கதவு இவர்களுக்கு மட்டுமே திறக்கும்! இபிஎஸ் ஓபன் டாக்!
dubai to chennai
logo
Kalki Online
kalkionline.com