
விவசாயிகளுக்கு உரம் வழங்க 22,303 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய விவசாயிகள் தடையின்றி வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ஒன்றிய அரசின் சார்பில் உரங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சத்து நிறைந்த தரமான பயிர்களை விளைவிக்க முடிகிறதா. மேலும் மண்ணினுடைய சத்தும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டும், விவசாயிகள் அதிக அளவில் பயிரிட ஏதுவாகவும் நடப்பாண்டில் யூரியா இல்லாத உறங்களுக்கான மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய விவசாயி உடைய நிலைமை பாதுகாக்கவும், மானிய விலையில் தரம் வாய்ந்த உரங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், யூரியா அல்லாத உரங்களை மக்களுக்கு விநியோகம் செய்ய 22,303 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அக்டோபர் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை என்று காலவரையறை செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் நலனை கருதி உரங்களுக்கான மானியத்தை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள மானியத்தின் மூலம் இந்தியாவுடைய அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு தரம் வாய்ந்த சத்து நிறைந்த உரங்கள் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் உற்பத்தி அதிகரித்து நாட்டினுடைய பொருளாதாரம் மேம்படும். இது மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு உற்பத்தியை பெருக்குவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது அமைச்சரவை கூட்டம் உரங்களுக்கு மானியம் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்திருப்பது, பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை தற்போது வழங்கியுள்ள மானியத்தின் மூலம் இந்தியாவுடைய அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உரங்களை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தங்கு தடையற்ற விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.