கோடிக்கணக்கான சொத்து.. கண்டுகொள்ளாத பிள்ளைகள்.. செல்லப்பிராணிகளுக்கு உயில் எழுதிய தாய்!

Pets
Pets

சீனாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 23 கோடி மதிப்பான சொத்துக்களை செல்லப்பிராணிகளுக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு என்ன காரணம் என இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

என்னதான் பெற்றோர் பிள்ளைகளுக்கு எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு மோசமாகவே இருக்கிறது. சில பிள்ளைகள் தங்களது பெற்றோரது முதுமை காலத்தில் சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதனால் கடைசி காலத்தில் பல பெற்றோர்கள் தனிமையிலேயே வாழ வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படிதான் சீனாவிலும் தனிமையில் இருந்த பெண் ஒருவர் தனது 23 கோடி சொத்துக்களை பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் செல்ல பிராணிகளுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். 

சீனாவின் ஷாங்காய் பகுதியில் வசித்து வரும் இந்த பெண்மணி, தன்னை தன் பிள்ளைகள் புறக்கணித்து விட்டதாகக்கூறி, தன்னுடன் உறுதுணையாக இறுதி வரை இருந்த செல்லப்பிராணிகளுக்கு தன் சொத்துக்களை எழுதி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் சீனாவின் சட்ட விதிகளின்படி விலங்குகளுக்கு சொத்தை எழுதி வைக்க முடியாது என்பதால், 23 கோடி சொத்துகளும் அங்குள்ள கால்நடை மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தனது ஒட்டுமொத்த எஸ்டேட்டையும் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க வேண்டும் என உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வயதான காலத்தில் தனது பிள்ளைகள் நேரில் வந்து அவரை சந்திக்காததால் கோபமாக இருந்துள்ளார் அந்த பெண்மணி. இதன் காரணமாகவே தனது எல்லா சொத்துக்களையும் செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்துள்ளார். அவருக்கு எத்தனை வயதாகிறது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், “சீன விதிகளின்படி விலங்குகளுக்கு சொத்துக்களை எழுதி வைக்க முடியாது. வேண்டுமானால் விலங்குகளை பராமரிக்க ஒருவரை நியமிக்க முடியும். அதே நேரம் மொத்த சொத்துக்களையும் கால்நடை மருத்துவமனையின் பெயரில் எழுதி வைப்பதிலும் ஆபத்து உள்ளது” எனக் கூறினார். 

இதையும் படியுங்கள்:
மதுரை மல்லிக்கு மட்டுமல்ல; அப்பளத்துக்கும்தான் பேமஸ்!
Pets

இதை வைத்து பார்க்கும்போது சீனாவின் குடும்ப அமைப்பு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தனது குழந்தைகளின் மோசமான நடவடிக்கைகளால் பெற்றோர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றம் அடைகிறார்கள் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com