விவசாய கடன்கள் தள்ளுபடி, 24 மணி நேரமும் இலவச மின்சாரம் - EPS தேர்தல் வாக்குறுதி..!!

அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முன்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று EPS தேர்தல் வாக்குறுதியளித்துள்ளார்.
EPS ADMK
EPS
Published on

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மொத்தல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி நிலையில் நேற்றுடன் (ஏப்ரல் 6ம் தேதி) வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 9-ம்தேதி வெளியாகிறது.

மேலும் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் நான்குமுனைப்போட்டி நிலவ உள்ளது. அதிமுக மற்றும் திமுக பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட, வழக்கம் போல் சீமான் தனித்து களம் காண்கிறார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்..! விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்..!
EPS ADMK

மேலும், தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து வரும் தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சிகளும் இணையாததால் தனித்து போட்டியிட உள்ளது.

அதனை தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசின. அதில் அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முன்முனை மின்சாரம் வழங்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் EPS வாக்குறுதி கொடுத்துள்ளார்.

விவசாயப் பணியின் போது விவசாயிகள் இடி மின்னல் தாக்கியோ, விஷ பாம்பு கடித்து, வனவிலங்குகள் தாக்கப்பட்டோ உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்வி கடன் தள்ளுபடி, நடைபாதை வியாபாரிகள் கடன் தள்ளுபடி மற்றும் 10,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், திமுக தேர்தல் அறிக்கையில், இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் EPS விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முன்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com