#BREAKING : அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்..! விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்..!

eps
EPSSource:Dinamani
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டுள்ளார்.

அதில்,

  • ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

  • அனைத்து குடும்பத்திற்கும் ஆட்சிக்கு வந்ததும் ரூ.10,000 வழங்கப்படும்.

  • மகளிர் தொகை ரூ.2,000 வழங்கப்படும்.

  • பேருந்துகளில் ஆண்களும் இலவசமாக பயணிக்க திட்டம் தொடங்கப்படும்.

  • ரேஷனில் விலையில்லா அரிசியுடன் சேர்த்து ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும்

  • அரிசி குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

  • சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்

  • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

  • ரூ.25,000 மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்

ஏற்கனவே வெளியான முக்கிய அறிவிப்புகள் :

  • குல விளக்கு திட்டம் என்னும் பெயரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை

  • வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

  • மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்

  • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்

logo
Kalki Online
kalkionline.com