18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Traffic Police
Traffic Police
Published on

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் பிடிபட்டால், அவர்களின் வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் எனவும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அதிரடியாக எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக அவ்வப்போது போக்குவரத்துத் துறையினர் பல விதிகளை கொண்டுவருவர். ஆனால், அப்போதும் சில விபத்துகள் நடைபெறதான் செய்கின்றன. அதேபோல் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் சாகசம் செய்து மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலை கொடுக்கின்றனர்.

எத்தனைமுறை போலீஸார் அறிவுரைக் கூறினாலும், அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டத்தான் செய்கின்றனர். அதில் பலரும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பவர்களைதான் போலீஸார் கைய்யும் காலுமாக பிடிக்கின்றனர். ஆனால், 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்பதே விதி.

இதனால், பல விபத்துக்கள் வரத்தான் செய்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.  மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
Norway Chess 2024: நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
Traffic Police

மேலும் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால்,  அவரின் பெற்றோருக்கு சிறையும்,  ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  இந்த விதி வரும் ஜூன் 1 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

இந்த அதிரடி விதியானது நிஜமாகவே அச்சுறுத்தும் விதமாகத்தான் உள்ளது. ஆகையால், இனியேனும் சிறுவர்கள் வாகனம் ஒட்ட அஞ்சுவார்கள் என்றே கணிக்கப்படுகிறது. இதன்மூலம், விபத்துக்கள் குறையவும் அதிக வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com