Praggnandha in chess competition
Praggnandha in chess competition

Norway Chess 2024: நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

Published on

இந்தியாவைச் சேர்ந்த இளம்விரரான பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2024ம் ஆண்டின் செஸ் போட்டியில், மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்துள்ளார்.

சர்வதேச செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் இந்த செஸ் தொடரில் அதிக புள்ளிகள் பெறுபவர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவார். நார்வே நாட்டைச் சேர்ந்த 5 முறை சாம்பியனான கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 6 பேர் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

அந்தவகையில் நேற்று ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் 2024 போட்டியின் மூன்றாவது சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 9க்கு 5.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். மறுபுறம், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா நேற்று, கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு 3 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேக்னஸ் கார்ல்சன் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம், 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். 

கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா, கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். இப்போது இவரின் வெற்றி மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம், கிளாசிக்கல் செஸ்ஸில் கார்ல்சனை தோற்கடித்த நான்காவது இந்தியர் என்ற பெருமை பிரக்ஞானந்தாவிற்கே சேரும்.

இதனையடுத்து நான்காவது சுற்றில், நகமுரா பிரஞ்ஞானந்தாவை எதிர்கொள்கிறார். முன்னதாக, அமெரிக்கரான ஹிகாரு நகமுரா, பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான அர்மகெடோன் ஆட்டத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதையும் படியுங்கள்:
T20 Worldcup: “இந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்” – பிரையன் லாராவின் கணிப்பு!
Praggnandha in chess competition

அதே நேரத்தில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் நார்வே செஸ் பெண்கள் பிரிவில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நார்வே செஸ் போட்டிகள் கடந்த மே 27ம் தேதி தொடங்கிய நிலையில், வருகின்ற ஜூன் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் இரண்டு முறை எதிர்கொள்ள உள்ளனர்.  

தற்போது இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பெண்கள் பிரிவில் அவர் சகோதரியும் முதல் இடத்தில் உள்ளதால், இருவரும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

logo
Kalki Online
kalkionline.com