#BREAKING : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

MK Stalin
MK Stalin
Updated on

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,829 கோடி கூடுதலாக செலவாகும். ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
தூக்கிப் போடுற ஐஸ்கிரீம் டப்பாவை வெச்சு கிச்சனை எப்படி அழகா மாத்தலாம்னு பாருங்க!
MK Stalin
logo
Kalki Online
kalkionline.com