100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை மேலும் 30 சதவிகிதம் அதிகரிப்பு… இத்தாலியில் வெளியான அறிக்கை!

Italy
Italy
Published on

இத்தாலியில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் பிரிவை சேர்ந்தவர்கள் என்றால், அதிகம் 60 வயதோருக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இருப்பார்கள். பொதுவாக 100 வயதைக் கடந்தவர்கள் இப்போது குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலியில் இப்போது அவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருப்பதாக இத்தாலியின் அறிக்கை கூறுகிறது.

இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு நேற்று வெளியிட்ட இந்த அறிக்கையில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் 100 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை அங்கு 30 சதவிகிதம் அதிகரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இவ்வளவு எண்ணிக்கையில் 81 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு 110 வயது அல்லது அதைவிட அதிக வயதானோரின் எண்ணிக்கை 21. அவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மற்ற 20 பேருமே பெண்கள்.

2009ம் ஆண்டு 110 வயதைத் தாண்டியவர்களில் பத்துப் பேர் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டது.

இத்தாலியின் மிக வயதானவராகக் கருதப்படுபவர் 114 வயதான பெண்மணி ஆவார். ஆண்களில் அதிக வயது உடையவருக்கு 110.

இதையும் படியுங்கள்:
சீனாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு… பாட்டில் தண்ணீர் விற்று முதல் இடம் பிடித்த நபர்!
Italy

இப்படி முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால் இத்தாலி அரசுக்கு நிறைய சிரமம் ஏற்படுகிறது. அதாவது ஓய்வூதியம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்காக அரசாங்கம் அதிகம் செலவிட நேரிட்டுள்ளது.

மேலும் குழந்தைப் பிறக்கும் விகிதம் சரிவை சந்தித்துள்ளதால், மக்கள் தொகையில் அவ்வளவு மாற்றம் இல்லை என்றாலும், இத்தாலி அரசுக்கு நிறைய செலவு ஏற்படுவதால், பொருளாதார ரீதியாக இத்தாலி சரிவை சந்திக்க நேரிடுகிறது. இதனால், மற்ற சேவைகளுக்கு பணம் தட்டுப்பாடு ஏற்படுவதால் சிக்கல் நீடிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com