அலங்கார ஊர்தி மாடல்கள்; மாநிலங்கள்  அனுப்ப  30-ம் தேதி கடைசிநாள்!

models
models
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டின் 2023-ம் ஆண்டுக்கான  குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை அனைத்து மாநில அரசுகளும் இம்மாதம் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 –இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

நாட்டில் வருகிற ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை மாநிலங்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

-இவ்வாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வருடம் தமிழகம் சார்பாக அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com