ரஜினியின் சுயசரிதை புத்தகம் ரெடி..?

ரஜினி
ரஜினி
Updated on

சில வருடங்களுக்கு முன் ரஜினி கூற, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதை எழுத, ரஜினியின் சுயசரிதையை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனந்த விகடன் இதழில் 'கதாவிலாசம்', 'தேசாந்திரி' உட்பட பல தொடர் கட்டுரைகளை எழுதி வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர் எழுத்தாளர் தான் எஸ்.ராமகிருஷ்ணன்.

அதனால், ரஜினி தன் சுயசரிதையை எழுதத் தேர்ந்தெடுத்த சரியான நபர் (Right Choice) இவர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியே அவரிடம், "சுயசரிதை என்பது பொய் கலப்பில்லாத, பாசாங்கில்லாத உண்மைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்; ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்னால் அப்படி இயங்க முடியவில்லை என்று சுயசரிதை முடிவை டிராப் பண்ணி விட்டாராம்

இப்போது அதே ஆனந்த விகடன் இதழில் பணியாற்றிய கார்க்கி பாவா என்பவரிடம் அந்தப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.

இணைய எழுத்தாளர் கேபிள் சங்கர் இயக்கி தொட்டால் தொடரும் என்ற படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் தான் இந்த கார்க்கி பாவா.இவர் ஒரு விஜய் ரசிகர்.2010 முதல் 2016 வரை தீவிரமாக விஜய்க்கு ஆதரவாகவும் ,ரஜினியை கிண்டல் செய்தும் ட்விட்டரில் (தற்போது எக்ஸ் பக்கம்)கருத்துக்களை பகிர்ந்தவர். இவரை ஏன் தேர்ந்தெடுத்த்தார் ரஜினி என்பது தெரியவில்லை.

ரஜினியின் சுயசரிதை வெளியாகிறது என்றால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 4 முக்கிய விஷயங்கள்:

1.நடிகை லதாவை (லதா ரஜினி அல்ல) ரஜினி விரும்பினார் என்பதற்காக எம் ஜி ஆர் ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தார் என்று ஒரு வதந்தி,கிசுகிசு உண்டு.அது பற்றிய தகவல்கள் உண்டா?என்பது பெரிய எதிர்பார்ப்பு

2. ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததற்கான உண்மையான காரணம் என்ன?

3.ரஜினி அரசியலில் குதிக்க முடிவு எடுத்து பின் பேக் அடிக்க நிஜமான காரணம் கொரானாவா?ரஜினியின் உடல் நிலையா?20% வாக்கு வங்கி தான் கிடைக்கும் என்ற ரிப்போர்ட்டா?

4.அண்ணாமலை தொடங்க இருக்கும் கட்சியில் ரஜினியின் பங்களிப்பு என்ன?

புதிதாக உருவாகி வரும் இந்தச் சுயசரிதையில் மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் தெரியவரும் என சினிமா வட்டாரங்கள் நம்புகின்றன.

இதையும் படியுங்கள்:
செகண்ட் ஹேண்டில் வித்தாலும் செம லாபம்.. 2026ல் சக்கப்போடு போடும் 5 அட்டகாசமான EV!
ரஜினி
logo
Kalki Online
kalkionline.com