ரஷ்யாவில் நிகழ்ந்த அதிசய காட்சி..! வானத்தில் தோன்றிய நான்கு நிலவுகள்..!

four moons in russia
four moons in russia source:dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு(பிப்ரவரி 1) வானத்தில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தெரிந்தது போன்ற அரிய நிகழ்வு ஏற்பட்டது. இந்த அரிய காட்சியைக் கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள்.

இது பராசெலீன்(Paraselene) அல்லது மாக் மூன்(Mock Moon) அல்லது மூன் டாக்ஸ்(Moon Dogs) எனப்படும் ஒரு அரிய ஒளியியல் நிகழ்வாகும். வளிமண்டலத்தில் உள்ள ஐஸ் படிகங்கள்(Ice crystals) மீது நிலவின் ஒளி பட்டு, ஒளி விலகல்(Refraction) அடைவதால், உண்மையான நிலவின் இருபுறமும் பிரகாசமான அல்லது போலியான நிலவுகள் உருவாகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கடும் குளிர் மற்றும் தெளிவான வானிலை இந்த நிகழ்வு தெளிவாக தெரிவதற்கு உதவியது.

கடும் குளிரால் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள பனிக்கட்டி படிகங்கள் மீது நிலவினுடைய ஒளி பட்டு சிதறியதால், உண்மையான நிலவுக்கு இரண்டு பக்கமும் இரண்டு பிரகாசமான ஒளி புள்ளிகள் தோன்றி நான்கு நிலவுகள் போன்ற பிரமையை ஏற்படுத்தின. இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக மிகவும் அரிதான வளிமண்டல ஒளியியல் நிகழ்வாகும். இந்த அரிய காட்சியின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது ஒரு விண்வெளி நிகழ்வல்ல; ஆனால் வானிலை தொடர்பான ஒளியியல் மாயையாகும். பனி படிகங்களால் ஆன மிக மெல்லிய, உயர்ந்த மேகங்கள் வழியாக நிலவொளி கடந்து செல்லும் பொழுது இந்த விளைவு ஏற்படுகிறது. பிரஸ் அல்லது சிரோஸ்ட்ராடஸ் எனும் இந்த மேகங்கள் தட்டையான ஆறு பக்க பனி படிகங்களைக் கொண்டுள்ளது. இந்த படிகங்கள் வழியாக நிலவொளி வளைந்தால் சந்திரனின் இரண்டு பக்கமும் பிரகாசமான புள்ளிகள் தோன்றும். இதுதான் வானத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் இருப்பது போன்ற மாயையை தோற்றுவிக்கும். இந்த அரிய காட்சி இரவு வானத்தை உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அதிசய தருணமாகும்.

இதே போன்ற நிகழ்வு பகலில் சூரியனைச் சுற்றி நடந்தால் அதை சன் டாக்ஸ்(Sun Dogs) என்று அழைப்பார்கள். இது நிலவை விட சூரியனில் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: கேட்டது வரம்.. கிடைத்தது மரணம்!
four moons in russia
logo
Kalki Online
kalkionline.com