தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அறிவிப்பு!

trains
trains
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மத்திய அமைச்சர் எல் முருகன் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மத்திய இரயில்வே துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதன்படி,

1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)

2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில்

3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில்

4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், 1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்

2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.

2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கும் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸவினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக எல்.முருகன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பயணிகள் விமானத்திற்கு துணையாக சென்ற UAE போர் விமானம்.! குவியும் பாராட்டுகள்.!
trains
logo
Kalki Online
kalkionline.com