

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை அருகே 4,375 ஏக்கர் பரப்பளவில் ஆறாவது நீர்த்தேக்கமான 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைகிறது. 342.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த நீர்த்தேக்கப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வரின் ஆற்றிய உரையிலிருந்து சிலர் உண்மை தெரிந்தும் தெரியாததா போல் திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என்று பொய்யாக கூறி வருகின்றனர். கலைஞர் தலைமையில் 1967 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 2011 வரை தமிழ்நாட்டில் உப்பாறு சோலையாறு மருதாநதி பாலாறு சிற்றாறு உள்ளிட்ட 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 121 புதிய தடுப்பணை பணிகளும் 63 அணைக்கட்டுகளை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர் தேக்கம் அமைக்கப்பட்டுகிறது. 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல் மாமல்லன் நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்பட உள்ளது. 1.65 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர் தேக்கமாக கோவளம் முகவடி நிலத்தில் அமைகிறது. கோவளம் உப வழிநிலத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது . 13 லட்சம் மக்களுக்கு இதன் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும். 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல் மாமல்லர் நீர் தேக்கத்தில் சேகரிக்கப்பட உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் அளவுக்கு சென்னை அருகே இந்த ஆறாவது நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.மாமல்லன் நீர்த்தேக்கம் மூலம் நன்னீரை தேக்கி கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படும்
இந்த ஆட்சியில் கடந்த ஐந்து வருடமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பி திறந்து வைத்திருக்கிறோம். 450 கோடி மதிப்பீட்டில் காவிரி டெல்டா தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் நீர் வளத்தை பெருக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்."
இந்த நிகழ்வில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் முழுப்பட்டியலை முதலமைச்சர் வாசித்தது கைத்தட்டல் பெற்றது.
மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கமான செம்பரம்பாக்கம் (Chembarambakkam),சென்னை நகரின் முதல் பெரிய நீர்த்தேக்கம் பூண்டி (Poondi / Sathyamoorthy Sagar) சோழவரம் (Cholavaram / Sholavaram) சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரமான புழல் வரிசையில் இணையும் இந்த மாமல்லன் நீர்த்தேக்கம் நிச்சயமாக மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.