#JUST IN : நான் இபிஎஸ் சந்திக்க செல்லவில்லை - திடீர் ட்விஸ்ட் கொடுத்த தனியரசு..!

eps thaniyarasu
eps thaniyarasu source:oneindia
Published on

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த நவம்பர் மாதம் தான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இந்நிலையில் திடீரென சென்னை எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவம்பரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவு, 2024இல் இல்லாத அளவு வீழ்ச்சியைச் சரிவை இழப்பைக் கட்டாயமாக அவரது தலைமையிலான அணியும் சந்திக்கும்.திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய அணியும் மிக வலிமையான அணி. கிட்டத்தட்ட அது தொடர்ந்து தேர்தலில் வெற்றி மேல் வெற்றி பெற்ற அணி. அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது என பேசி இருந்தார். திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பை உணர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தேன் என்றார்.

இந்த சூழலில் தனியரசு திடீரென EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது.

இது தொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறிகையில், நான் எடப்பாடியை சந்திக்க வில்லை என தனியரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சக்கரபாணியை தான் பார்க்க சென்றேன். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை என கூறினார்.

பசுமை வழிச்சாலையில் திமுக அமைச்சர்களின் வீடுகள் உள்ளன. அதே சாலையில் தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு..!
eps thaniyarasu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com