45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் – இலங்கை கோர்ட் அதிரடி!

Fishermen
Fishermen
Published on

தமிழ்நாட்டு எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி 45 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து 45 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடித்தாலும், இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக சொல்லி தொடர்ந்து கைது செய்து வருவது வழக்கமாகி வருகிறது. இதுகுறித்து இந்திய கடலோர கடற்படையினர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்றாலும் எந்த பயனும் இல்லை.

இதற்கிடையே இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை மொட்டை அடித்து, அதிக அபராதம் விதித்து தொல்லை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆகஸ்ட் 8ம் தேதி ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 35 மீனவர்கள் கைது செய்து மற்றும் அவர்களது 4 படகுகளையும் வலைகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 35 மீனவர்கள் புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.

35 மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தமிழக மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, 35 மீனவர்களில் 12 பேருக்கு தலா ரூ35 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:
“இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்” – ஈரான் குற்றச்சாட்டு!
Fishermen

அதன்பின்னர் ஒரு 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 10 மீனவர்களுக்கும் தலா ரூ35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது புத்தளம் நீதிமன்றம். அதாவது 45 தமிழக மீனவர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 கோடி அபராதம் விதித்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மீனவர்கள் உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 கோடி என்பது இந்திய மதிப்பில் 2.76 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.



Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com