இருளில் மூழ்குமா ஈரான்? 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்: அடுத்த டார்கெட் இதுதான்!

Trumph Warning to Iran
America, Israel - Iran
Published on

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், பல நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் இன்று வரை சென்றடையாமல் இருக்கின்றன. இருப்பினும் சீனா, வங்கதேசம், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் மற்ற நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க்கப்பல்களை நட்பு நாடுகள் அனுப்ப வேண்டும் என அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு எந்த நாடு ஒத்துழைப்பு தராத நிலையில், அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரானின் மின் கட்டமைப்புகள் அனைத்தையும் தாக்குவோம் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹார்மூஸ் ஜலசந்தியை ஆபத்துகள் ஏதுமின்றி முழுவதுமாக ஈரான் அரசு திறக்க வேண்டும். இல்லையெனில் ஈரானின் மின்சார உற்பத்தி கட்டமைப்புகள் மீது பலமான தாக்குதலை நடத்துவோம். இருப்பதிலேயே பெரியது மீது தான் முதல் தாக்குதல் நடக்கும்” என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள ஈரான் அரசு, இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என்றும் வன்மையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில் இன்று மின்சார கட்டமைப்புகளைத் தாக்குவோம் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பதிலடி தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்தியா தலைமை வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு, ஒரு சுயேட்சையான மற்றும் வலிமையான பங்காற்ற வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் வலியுறுத்தியுள்ளார். மேலும் சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க பிரிக்ஸ் நாடுகள் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நம் வாழ்வில் தேவையற்ற 3 செயல்கள்!
Trumph Warning to Iran

போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை ஈரான் தாக்க முயன்றதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்போ நாடுகள் மிரண்டு போயுள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்கா - பிரிட்டன் கூட்டுப்படை இராணுவத் தளத்தை ஏவுகணை மூலம் ஈரான் தாக்க முயற்சி செய்துள்ளது.

இதுவரை ஈரானிடம் 2,000 கி.மீ. இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே இருக்கிறது என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது 4,000 கி.மீ. இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளும் ஈரானிடம் இருப்பதைக் கண்டு மேற்குலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
சுடு நீர் கிணறுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?
Trumph Warning to Iran

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com