பயணிகள் ஷாக்..! 5 பொங்கல் சிறப்பு ரெயில்கள் திடீர் ரத்து..!

train
train
Published on

பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 19-ந்தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06011),

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06053),

சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வரும் 19-ந்தேதி இரவு 11.25 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06033),

போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு 21-ந்தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06024),

சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு 21-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06023) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பொங்கலோ பொங்கல்: இத்திருவிழாவின் பின்னால் இருக்கும் ஆன்மிக ரகசியம்!
train

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com