பொங்கலோ பொங்கல்: இத்திருவிழாவின் பின்னால் இருக்கும் ஆன்மிக ரகசியம்!

The spiritual secret of the Pongal festival
Pongal Festival
Published on

மிழர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. மண், மழை, சூரியன், காற்று, நீர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளின் கருணையால் மனிதன் வாழ்கிறான். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தும் மிகப் பழைமையான தமிழர் திருவிழாதான் பொங்கல். அறுவடை முடிந்த பின், மனிதன் இயற்கைக்கு நன்றி சொல்லும் ஒரு ஆன்மிக நிகழ்வாகவே பொங்கல் தோன்றியது. அது வெறும் இனிப்பு சாப்பிடும் நாள் அல்ல; அது நன்றியுணர்வின் திருநாள்.

பொங்கல் திருவிழாவின் வரலாறு: பொங்கல் என்ற சொல் ‘பொங்கு’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள், நிரம்புதல், செழிப்பு, வளம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் தமிழர்கள் இந்தத் திருவிழாவை கொண்டாடினர். அந்தக் காலத்தில் விவசாயமே வாழ்க்கை. மழை பெய்தால்தான் விதை முளைக்கும், சூரியன் இருந்தால்தான் பயிர் வளரும். எனவே, சூரியனை கடவுளாகக் கருதி, அறுவடை முடிந்தவுடன் அவருக்கு நன்றி சொல்ல ஒரு விழா உருவானது. அதுவே பொங்கல். பொங்கல் தினம் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் நாள். இதை உத்தராயணம் என்பார்கள். இந்த நாளில் இருந்து இருள் குறைந்து ஒளி அதிகரிக்கத் தொடங்குகிறது. அதனால் இந்த நாள் நல்லதின் தொடக்கமாகக் கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்:
குடும்ப மகிழ்ச்சிக்கு பைரவர் வழிபாடும் பச்சரிசி மாவு கோலமும்: பிரிந்தவர்களையும் சேர்க்கும் எளிய பரிகாரம்!
The spiritual secret of the Pongal festival

சூரியன் – பொங்கலின் மையம்: பொங்கல் என்பது முதன்மையாக சூரிய வழிபாடு. விவசாயத்திற்கு உயிர் கொடுப்பவன் சூரியன். பயிர்களை வளர்க்கும் வெப்பமும் ஒளியும் அவனிடமிருந்துதான் கிடைக்கிறது. அதனால் திறந்தவெளியில் மண் பானையில் பொங்கல் வைத்து சூரியனை நோக்கி ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி வழிபடுவது தமிழர் மரபாகும்.

மாட்டு பொங்கலின் முக்கியத்துவம்: விவசாயத்தின் முதுகெலும்பு மாடுகள். உழவு, விதைப்பு, அறுவடை அனைத்திலும் மாடுகள் உதவுகின்றன. அதனால் ஒரு நாளை முழுவதும் மாடுகளுக்காக அர்ப்பணித்து, அவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து, சிறப்பு உணவு கொடுத்து மரியாதை செய்வதே மாட்டு பொங்கல்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் திருநாளையொட்டி விசேஷ வழிபாடுகள் காணும் சில கோயில்கள்!
The spiritual secret of the Pongal festival

பொங்கலின் சிறப்பு கதைகள்:

நந்தியின் கதை: சிவபெருமான் மனிதர்களுக்கு ஒரு செய்தி சொல்ல நந்தி என்ற மாட்டை அனுப்பினார். அவர் சொல்லியது: ‘மாதம் ஒருமுறை உணவு, தினமும் எண்ணெய் குளியல்.’ ஆனால், நந்தி தவறாக ‘தினமும் உணவு, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல்’ என்று சொல்லிவிட்டது. இதனால் மனிதர்கள் தினமும் உணவு தேவைப்பட, அதிகமாக விவசாயம் செய்ய வேண்டிய நிலை வந்தது. இதனால் கோபமடைந்த சிவன், நந்தியை பூமியில் மாடாக இருந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று சபித்தார். அதனால்தான் மாடுகள் மனிதர்களுக்கு உதவுகின்றன. அதற்கான நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கல்.

பொங்கல் என்பது வெறும் உணவு விழா அல்ல. அது இயற்கைக்கு நன்றி சொல்லும் ஆன்மிக திருவிழா. சூரியன், மழை, மண், மாடு, விவசாயி இவர்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அவர்களுக்கு நன்றி கூறி, இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொடுக்கும் விழாவே பொங்கல். உழைக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரின் திருவிழா பொங்கல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com