இலவச 5G டேட்டாவுக்கு ஆப்பு! டெலிகாம் நிறுவனங்கள் எடுத்த அவசர முடிவு.!

முடிவுக்கு வருகிறதா அன்லிமிடெட் 5G? கட்டண உயர்வுக்குத் தயாராகுங்கள்!
5G சேவை
5G Internet
Updated on

இந்தியாவில் தற்போது அதிவேக 5G இணைய சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக 4G இணைய சேவை பயன்பாட்டில் இருந்த போது, அன்லிமிடெட் வசதி கொடுக்கப்படவில்லை. ஆனால் 5G இணைய சேவையை பிரபலப்படுத்த அன்லிமிடெட் வசதியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கின.

தற்போது வரை ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 5G இணைய வசதி அன்லிமிடெட்டாக கிடைக்கிறது. ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் 5ஜி மொபைல்போனை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதன் காரணமாகவே பலரும் 4G போனிலிருந்து 5G போனுக்கு மாறினர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி 5G அன்லிமிடெட் இணைய சேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் இனி 5G அன்லிமிடெட் சேவை நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் 5G இணைய வசதிக்கான கட்டணமும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

5G மொபைல்போன் வைத்திருப்பவர்கள் இலவச அன்லிமிடெட் இணைய தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக செலவினம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அதிக முதலீடு காரணமாக இந்த சேவையை நிறுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இதன்படி வெகு விரைவில் அன்லிமிடெட் 5G சேவை நிறுத்தப்பட உள்ளது மேலும் 5G இணைய சேவையைப் பயன்படுத்த குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படும். தினசரி டேட்டா போலவே, 5G இணைய சேவையைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தாலும், அதிக நேரம் மொபைல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க இது உதவியாக இருக்கும்.

மொபைலில் இணைய சேவையை தனிப்பட்ட மற்றும் சாதாரணப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வணிக ரீதியாக மொபைல் இணைய சேவையை பயன்படுத்துபவர்களுக்கு தான் பாதிப்பு.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் கல்வி முறை மற்றும் வீட்டிலிருந்தே வேலை போன்ற நடைமுறைகள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் வரம்பற்ற 5G இணை சேவையைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்து இருப்பது, வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5G technology
5G technology
இதையும் படியுங்கள்:
இனி இவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது.! அதிரடி காட்டிய மத்திய அரசு.!
5G சேவை

தற்போது இந்தியாவில் ஏர்டெல், ஜியோ வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய 4 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன.

வோடோபோன் ஐடியா ஒரு சில நகரங்களில் மட்டுமே 5G சேவையை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் 5G சேவையை விரிவுபடுத்தும் பணிகளில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

5G சேவையைப் பலரும் பயன்படுத்தி, அதற்கு பழகிவிட்ட நிலையில் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் 5G இணைய சேவைக்கான கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதால், இனி வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செலவிற்கு அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதேபோல் மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் டிவியை பார்ப்பவர்களும் இதன்மூலம் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
படத்துல பயங்கரமான வில்லன்! ஆனால் நிஜத்துல...?
5G சேவை
logo
Kalki Online
kalkionline.com