6ம் கட்ட வாக்குப்பதிவு… பிரதமரின் X தள பதிவு!

6th Phase Election
6th Phase Election

இன்று இந்தியா முழுவதும் 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதுகுறித்து மோடி தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் நடைபெற்றது. குஜராத்தில் 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்திராவில் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் வங்கத்தில் தலா 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்தவகையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும், தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளிலும்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்திராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து 49 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்திராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதியில் நடைபெற்றது.  இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் 60.09% சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாம் கட்ட தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும், ஹரியானா மாநிலத்தில் பத்து தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளிலும், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் நான்கு, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்… தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்!
6th Phase Election

இந்தநிலையில் பிதமர் நரேந்திர மோதி, "வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. உங்களுடைய வாக்குகளையும் முக்கியமானதாக்க வேண்டும். தேர்தல் நடைமுறையில் உற்சாகமாக மக்கள் பங்கேற்கும்போது ஜனநாயகம் செழிப்பாகும். குறிப்பாக பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com