கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்… தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்!

Cina around Taiwan
Cina around Taiwan
Published on

ஏற்கனவே சில உலக நாடுகள் ஒன்றுக்கொன்றுப் போரிட்டு கொண்டு வரும் நிலையில், தற்போது மேலும் இரு நாடுகள் போருக்குத் தயாராகியுள்ளது. அந்தவகையில், நவீன ஆயுதங்களுடன் தைவானை சுற்றி வளைத்துள்ளது சீன ராணுவம்.

பல வருடங்களாக சீனாவின் ஒருகிணைந்தப் பகுதியாக இருந்த வந்த தைவான், கடந்த 1949ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால், இரு வேறு நாடுகளாகப் பிரிந்தன. அதாவது, தைவான் நாட்டிற்கு முதலில் வந்தவர்கள், தற்போதைய தெற்கு சீனாவிலிருந்து வெளியேறியவர்கள் என்று கருதப்படுகிறது. ஏசு பிறப்பிற்கு முந்தைய AD239ல், இந்த தைவான் தீவு குறித்து சீனாவின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரம் அது.

பல வருடங்களுக்கு முன்னர் டச்சு வசம் சென்ற தைவான் கொஞ்சக் காலத்திலேயே மீண்டும் சீனாவின் மன்னரிடம் வந்தது. முதல் சீன-ஜப்பானியப் போருக்குப் பிறகு அது ஜப்பான் வசம் சென்றது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த நிலையில், தைவான் மீண்டும் மெயின்லேண்ட் சீனா வசம் சென்றது. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் இதனை ஏற்றன.

அதன்பின்னரே, அந்த உள்நாட்டுப் போர் நடைபெற்றது. உள்நாட்டு போரில் கம்யூனிஸ்ட் கட்சி, அப்போதைய தலைவர் சியாங் காய் ஷேக்கின் படைகளைத் தோற்கடித்தது. இதனால் சியாங் தனது 15 லட்சம் ஆதரவாளர்களுடன் தைவான் சென்றார். சியாங் மறைவுக்கு பின்னர் தைவானில் மக்கள் ஆட்சிக் கொண்டு வரப்பட்டது. இதனை பல சிக்கலுக்குப் பின்னர் 12 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக ஏற்றன.
இதனால், இருவேறு நாடுகளாக மாறின.

இதனையடுத்து சீனா, தைவான் எங்களது ஒரு அங்கம் என்று கூறி மோதல் போக்கை கையாண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது கடல் வழியாகவும், வான் வழியாகவும் சீனா தைவானை சுற்றி வளைத்துள்ளது. அந்தப்பகுதியில் 2 நாட்களுக்கு சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.

சினாவில் மேற்கு திசையில் இருக்கும் தைவானின் புதிய அதிபராக சில நாட்கள் முன்னர்தான் வில்லியம் ராய் பதவியேற்றார். அவர் தங்களை யாரும் அச்சுருத்த முடியாது என்று பேசியதையடுத்து, சீனா ராணுவம் இரண்டு நாள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சீனா ராணுவ செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “தற்போது நடைபெற்று வரும் போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்குத் தண்டனையாக இருக்கும். தைவானின் அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் கோபமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான வார்னிங் ஆக இந்தப் போர் பயிற்சி அமையும்." என்றார்.

அந்நிய சக்தி என்று குறிப்பிட்டது அமெரிக்காவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில், தைவானுக்கு முழு ஆதரவாக அமெரிக்காவே இருந்து வருகிறது. அகையால், சீனா அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதையும் படியுங்கள்:
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – மர்ம நபரால் பரபரப்பு!
Cina around Taiwan

இதற்கிடையே, தைவானின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், “சீனாவின் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவானின் ராணுவம் உச்ச கட்ட உஷார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இடையூறு விதிக்கும் செயல்.” எனவும் விமர்சித்துள்ளார்.

தைவான் அதிபர் பொறுப்பேற்ற மூன்றே நாட்களில் சீனா இப்படி சுற்று வளைத்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் ஆகிய பகுதிகளிலும் சீன ராணுவத்தின் போர் கப்பல்களும் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தப் போர் பயிற்சிக்கு Sword-2024A என சீனா பெயரிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com