டாஸ்மாக் கடைகளை உடனே மூட முடியாது... எங்களுக்கு டைம் வேண்டும் - தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம்..!

Tasmac
Tasmac
Updated on

தமிழ்நாட்டில் தவெக கட்சியின் தலைமையிலையான புதிய அரசு தலைமை ஏற்றதும் அதன் தலைவர் விஜய் தமிழகம் எங்கும் பரவி உள்ள போதை கலாச்சாரத்தை வேர் அறுக்கும் வகையில் முதல் உத்தரவாக பள்ளி , கல்லூரிகள் , பேருந்து நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள சுமார் 717 டாஸ்மார்க் கடைகளை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார் . டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து நீண்டகாலமாக கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல்வரின் இந்த அதிரடி உத்தரவை வரவேற்று பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து இருந்தனர்.

காரணம் முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் இந்த சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்களில் மது அருந்தும் அளவு குறைதல், குடும்ப வன்முறை மற்றும் தகராறுகள் குறையும் வாய்ப்பு , குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் தவிர்ப்பு , மதுவால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் குறையும் வாய்ப்பு முக்கியமாக போதையில் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என்பது போன்ற மாற்றங்கள் நிகழும் என்பதால் மது ஒழிப்பு நிச்சயம் வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

ஒருபக்கம் நன்மை இருப்பினும் இதனால் கள்ளச்சாராயம் , அரசு வருமானம் குறைதல் போன்ற பின் விளைவுகளும் உண்டு. அதை தடுக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது முதல்வர் இட்ட உத்தரவினால் மூடப்படும் கடைகளில் பணியில் இருக்கும் சுமார் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிலை என்ன என்றும் அவர்களது வாழ்வாதாரம் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் ( Tasmac Employees Union) கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திடீரென 717 டாஸ்மாக் கடைகளை மூடினால் அதனை நம்பி வாழும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் இரண்டு வாரத்திற்குள் என்ற குறுகிய காலத்தில் அத்தனை கடைகளையும் மூடுவது கடினம் டாஸ்மாக் கடைகளை மூடவும் மாற்று இடத்திற்கு செல்லவும் முறையான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .

அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்குமா? அந்தப் பணியாளருக்கு தகுந்த பணி ஏற்பாடு செய்யப்படுமா? மேலும் மதுக்கடைகள் மூடப்படுமா ? என்றெல்லாம் கருத்துக்கள் வலம் வருகின்றன.

இதையும் படியுங்கள்:
நேரம் குறையுது.. கட்டுப்பாடு ஏறுது.! இனி ஆதார் கார்டு இருந்தா தான் 'சரக்கு'.!
Tasmac
logo
Kalki Online
kalkionline.com