

அசாம் மாநிலத்தில் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில் என்ஜின் உட்பட ஐந்து பெட்டிகள் தடம் புரண்டிருந்தாலும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் ஜமுனாமுக் மற்றும் காம்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2.17 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன, மேலும் ஒரு குட்டி யானை காயமடைந்தது. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின்(NFR) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் அவசர கால பிரேக்குகளை பயன்படுத்திய போதிலும், யானைகள் ரயிலின் மீது மோதியதால் விபத்தை தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
யானைகள் கூட்டத்தை கவனித்த ரயில் பைலட் அவசரமாக நிறுத்த முயற்சித்தும் யானைகள் மீது ரயில் மோதி விட்டது. இந்த விபத்தில் 8 யானைகள் உயிரிழந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் பயணிகள் யாருக்கும் காயம் எதுவுமில்லை. பின்னர் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் உள்ள காலி இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்திய பின்பு ரயில் புறப்பட்டு சென்றது. அவ் வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமாகியுள்ள நிலையில் வேறொரு பாதை வழியாக இயக்கப்படுகின்றன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இந்தப் பகுதி பொதுவாக யானைகள் நடமாடும் பகுதி (Elephant Corridor) அல்ல என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு யானைகள் வந்ததை ஓட்டுநர் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க கௌகாத்தி ரயில் நிலையத்தில் அவசர உதவி எண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர உதவி எண்கள்:
0361-2731621
0361-2731622
0361-2731623