

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர், அஸீம் ஆர்.மகாஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரணமாக , அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் பணிகளைப் பற்றி குறிப்பிட்டார்.
வளைகுடா பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரக் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானில் சிக்கியிருந்த 981 மாணவர்கள் மற்றும் 657 மீனவர்கள் உட்பட மொத்தம் 2180 இந்தியர்களை , ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக பாதுகாப்பாக இந்திய தூதரகம் மீட்டுள்ளது.
ஈராக்கில் சிக்கி இருந்தவர்களை சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக மீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 28 ஆம் தேதி முதல், சுமார் 8.43 லட்சம் இந்திய குடிமக்கள் வளைகுடா பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர் , என்று அஸீம் ஆர். மகாஜன் தெரிவித்துள்ளார்.