ஒரு ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய 90 ஆயிரம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த நபர் அந்த ஷோ ரூம் வாசலிலேயே ஸ்கூட்டரை சுத்தியலால் அடித்து நொறுக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இப்போது பலரும் வண்டியே பயன்படுத்துகின்றனர். பேருந்து பயணம், ஆட்டோ பயணம் எல்லாம் இப்போது குறைந்துதான் வருகின்றன. ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது இருக்கிறது. அதுவும் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான ஸ்கூட்டரை வாங்க அரசு ஊக்குவித்தாலும், பலருக்கு இது பிடிக்கவில்லை. ஏனெனில், இந்த ஸ்கூட்டர் வாங்கிய உடனே பல பிரச்னைகள் வருகின்றன.
இந்தியாவில் எலெட்ரிக் ஸ்கூட்டருக்கு பெயர்போன நிறுவனம்தான் ஓலா. அந்தவகையில் ஒரு ஓலா ஷோ ரூமில் ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறார். ஆனால், வாங்கிய ஒரே மாதத்தில் அந்த ஸ்கூட்டர் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது. அதாவது மக்கர் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதனை பழுதுபார்க்க அந்த நபர் ஸ்கூட்டியை ஓலா ஷோ ரூமுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் அதனை சரி செய்ய 90 ஆயிரம் கேட்டிருக்கிறார்கள்.
இதனால் கடும் கோபமடைந்த அந்த நபர் மீண்டும் ஒரு குட்டி யானையில் ஸ்கூட்டரை எடுத்துப் போட்டு ஷோ ரூம் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி, ஆத்திரம் தீர தீர அடித்து நொறுக்கியிருக்கிறார். இதற்காக அவர் கையோடு சுத்தியல் எடுத்து வந்திருக்கிறார். அந்த சுத்தியலைப் பயன்படுத்தி அடித்துக்கொண்டே 'இந்த வண்டி ரிப்பேருக்கு 90 ஆயிரம் வேண்டுமாம்' என்று சொல்லி புலம்பிக்கொண்டே அடித்திருக்கிறார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இவரின் புலம்பலும் பதிவாகியிருக்கிறது. இந்த சம்பவம் எங்கே எப்போது நடந்தது என்றெல்லாம் வெளிவரவில்லை.
மேலும் கடந்த மாதம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தங்களுக்கு வந்த 10,644 புகார்களில் 99.1 சதவீதம் தீர்த்துவிட்டதாக தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (NCH) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படியெல்லாம் காசு பறிக்கிறாங்க பாருங்களேன்… இவுங்களே கோளாறா விற்பாங்களாம், அத சரி செய்ய இவங்களே காசு வாங்குவாங்களாம்… என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு…