‘குண்டான் சட்டி’ பட இயக்குனராகும் 12 வயது பள்ளி மாணவி!

‘குண்டான் சட்டி’  பட இயக்குனராகும்  12 வயது பள்ளி மாணவி!
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

ள்ளி மாணவி இயக்கி வெளியாகப் போகும் ‘குண்டான் சட்டி’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்தப் படத்தைப் பற்றிய சுவையான செய்திகள் நமது எதிர்பார்ப்பையும் எகிற வைப்பதாக உள்ளது. அப்படி என்ன புதுமை ?

7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி இந்த சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கி யிருப்பதுதான் இந்தப் படத்தின் புதுமை. இந்தச் சிறு வயதிலேயே பெரிய திரையில் ஆர்வத்துடன் தன் வயதுக்கு உரிய கதை அம்சத்துடன் இயக்குனராக களம் இறங்கியிருப்பது அனைவரின் புருவத்தையும்  உயர்த்திருக்கிறது.  

கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்ற வற்றுடன்மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும் எந்தெந்த விசயங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் போன்ற சிறு சிறு விஷயங்களையும் ரொம்ப இயல் பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் சிறுமியான பி.கே.அகஸ்தி.

டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திக்கேயன் தயாரிப்பில் எம்.எஸ் அமர்கித் இசையமைப்பில் பி எஸ் வாசு எடிட்டிங்கில் கதை அமைத்து பி.கே.அகஸ்தி இயக்கியுள்ளார். திரைக்கதை வசனம் பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி எழுதியுள்ளார்.

கடந்த 8 மாதங்களாக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஒன்றாகக் கலந்து, ஆலோசித்து தனது முழு உழைப்புடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.கே.அகஸ்தி... சிறுவர், சிறுமிகளுக்கான இப்படம் மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு வயதிலயே சமூக அக்கறை கொண்டு அகஸ்தி ஆர்வத்துடன் இயக்கிய இப்படத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்று கண்டு களித்து ஆதரவு தரலாம். 

logo
Kalki Online
kalkionline.com