கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்த 5 வயது சிறுவன்!

Kilimanjaro Hill
Kilimanjaro Hill
Published on

ஆசியாவிலேயே மிக குறைந்த வயதில் கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்ட சிறுவன் என்ற பெருமையை சேர்த்திருக்கிறார் பஞ்சாபை சேர்ந்த டெக்பீர் சிங் என்ற சிறுவன்.

ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலை சுமார் 19, 340 அடியாகும். இந்த மலை தான்சானியாவில் உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை என்றாலும் ஆப்பிரிக்க கண்டத்தை பொறுத்தவரை இது பெரியமலை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் 13 வயது சிறுமி ஏறி சாதைனை படைத்தார். அதுவும் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.

இதனையடுத்து தற்போது இதைவிடவும் குறைவான வயதில், அதாவது ஐந்து வயது சிறுவன் கிளிமஞ்சாரோ மலையில் ஏறியிருக்கிறார். ஆகஸ்ட் 18ம் தேதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய சிறுவன், ஆகஸ்ட் 23ம் தேதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.

இவர் துணைக்கு தனது தந்தையையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து அவரது தந்தை பேசியதாவது, “டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது”என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
இதயமே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதன்!
Kilimanjaro Hill

இந்த சிறுவயதில் போனைப் பார்த்துக்கொண்டும், பள்ளிக்கு எப்படி லீவ் போடலாம் என்று யோசித்துக்கொண்டும் இருக்கும் சிறுவர்களுக்கு மத்தியில், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மலையின் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்திருக்கிறார் டெக்பீர் சிங்.

இந்த கிளிமஞ்சாரோ மலை ஒரு எரிமலை என்றாலும், இப்போது செயலிழந்து இருப்பதால், எந்த பயமும் இல்லை. ஆனால், வருங்காலத்தில் மீண்டும் இது உயிர்த்தெழும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சமவெளிக்கு மேலே உயர்ந்து நிற்கும் கிளிமஞ்சாரோ மலையின் ஒரு சரிவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு 1973ஆம் ஆண்டில் கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சொத்தாகவும் இம்மலை குறிக்கப்பட்டது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com