இதயமே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதன்!

Heartless Man
Heartless Man
Published on

ஒரு சிறுநீரகம் இல்லாமல் வாழலாம், கண்கள் இல்லாமல் வாழலாம், கால் இல்லாமல் வாழலாம். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியுமா? முடியுமா என்ன? ஒருவர் வாழ்ந்திருக்கிறாரே.

பொதுவாக உடம்பில் எந்த உறுப்பு இல்லையென்றாலும், இதயம் இருந்தால் வாழலாம். இதயம் மட்டும் அதன் வேலையை நிறுத்திவிட்டால், அவர் உயிர் சென்றுவிடும் என்பது இயற்கை. ஒரு உடலுக்கு இன்றியமையாதது இதயம். மருத்துவத்துறையில் எப்படிப்பட்ட சாதனைகள் படைத்தாலும், ஒருவரை இதயம் இல்லாமல் வாழ வைக்கும் சாதனையானது நிச்சயம் போற்றுதற்குறியது. அது சரி, விஷயத்திற்கு வருவோம்.

கடந்த 2011ம் ஆண்டு 55 வயதான லூயிஸ், அமிலாய்டோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் ஆகியவை செயலிழந்தன. அவரின் இறப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக  மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அந்த நேரத்தில், லூயிஸின் மனைவி லிண்டா அவரை டாக்டர். பில்லி கோன் மற்றும் டாக்டர். புஸ் ஃப்ரேசியரிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு புது கருவியை கண்டுபிடித்தது குறித்து அவரிடம் விளக்கியுள்ளனர். அதாவது அந்த கருவி மனித சோதனைகளுக்கு முன்னேறுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 38 கன்றுகளில் சோதனை செய்தனர். அவர்கள் விலங்குகளின் இதயங்களை அகற்றி கருவி வேலை செய்கிறதா? என்று பரிசோதித்தனர். விலங்குகளின் இதயம் இல்லாமல் அவர்களின் உடலில் இரத்தத்தை செலுத்த முடிந்தது.

இதனைக் கேட்ட லூயிஸின் மனைவி, தனது கணவருக்கு அந்த கருவியை பயன்படுத்துமாறு அனுமதியளித்தார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (26-08-2024) பசி எடுக்கும் சமயத்தில் உலோக பொருட்களை சாப்பிட்ட இளைஞர்!
Heartless Man

இதனையடுத்து இந்த கருவி மூலம் நீண்ட நேரம் அவரை உயிர்ப்பிழக்க வைக்க முயற்சித்தனர். லூயிஸின் உடலில் தொடர்ச்சியான ஓட்ட பம்பை நிறுவிய பிறகு, அவர் விழித்தெழுந்து குணமடையத் தொடங்கினார். இருப்பினும், நோய் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலைத் தாக்கியதால், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, இறுதியில், ஏப்ரல் 2011 இல் அவரது உயிர்ப் பிரிந்தது.

கிட்டத்தட்ட இவர் 12 மணி நேரம் இதயம் இல்லாமல், இதயத்துடிப்பும் இல்லாமல் வாழ்ந்தார். இதனால், அவர்தான் இதயம் இல்லாமல் வாழ்ந்த உகலகின் முதல் மனிதர் ஆவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com