

நாம் அனைவரும் சேமிக்க போதுமான வருமானம் இல்லையே என கவலைப் பட்டு வருகிறோம். ஆனால், எவ்வளவு குறைவான வருமானம் இருந்தாலும் பணத்தைச் சேமிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
பிச்சை எடுத்து வாழும் ஒரு மூதாட்டி தான் அந்த அதிசய நிகழ்வை நடத்தியவர். அவர் அன்றாடம் பிச்சை எடுப்பதின் மூலம் சிறுகச் சிறுக ஒரு லட்சத்திற்கு மேல் சேர்த்து வைத்துள்ளாராம்.
பிச்சை எடுத்து வாழும் எல்லாருமே ஏழ்மையில் இருப்பார்கள் என்பதே நமது கருத்து ஆகும் என்றாலும் சிலர் பிச்சை எடுத்தே வீடு, சொத்து எல்லாம் வாங்கியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டி ஒருவர் சாலையோரம் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். பணத்தைச் சேமித்த மூதாட்டி உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரில் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் அங்குப் போவோர் வருவோரிடம் சில்லறையை வாங்கி, வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார். அவருக்கு எந்தவொரு சொத்து அல்லது சேமிப்பும் இல்லை என்றே மக்கள் கருதியுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் அவருக்கு உதவி வந்துள்ளனர். ஆனால், அவரிடம் பெரிய தொகை சேமிப்பாக இருந்தது.இதை அறிய வந்தபோது அந்தப் பிம்பம் முற்றிலுமாக மாறி விட்டது. அந்த மூதாட்டி இப்படி கடந்த12 ஆண்டுகளில் இரண்டு பைகள் முழுக்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகளைச் சேகரித்துள்ளார்.
பை முழுக்க இருந்த பணத்தை அப்பகுதி மக்கள் எண்ணியுள்ளனர்.அதுசுமார் ஒரு இலட்சமாக இருப்பதை அறிய வந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மூதாட்டியிடம் இவ்வளவு பணம் இருக்கும் விவரத்தை அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பணத்தை எண்ண ஆரம்பித்துள்ளனர். பணத்தை எண்ணும் பணிகள் அதிகாலையிலேயே பணத்தை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. அவரிடம் இருந்தது எல்லாமே நாணயங்களும் சிறு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மட்டுமே. இதனால் பணத்தை எண்ணும் பணிகள் இரவு வரை தொடர்ந்துள்ளது இதுவரை ₹1 லட்சத்திற்கும் மேல் எண்ணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். எந்தவொரு சொத்தும், செல்வமும் அந்த மூதாட்டிக்கு இல்லை என மக்கள் நினைத்த நிலையில், அவரும் பணத்தைச் சேமித்திருக்கிறார். பின்னர், அந்த மூதாட்டியிடம் இருந்த பணத்தை வாங்கிய போலீசார், அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், மூதாட்டிக்கு தேவைப்படும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். நீண்டகாலத் தனிமை காரணமாக அவருக்கு மனநலப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
பொருளாதார வல்லுநர்கள் சேமிப்பை வலியுறுத்தி வரும் நிலையில், நம்மில் பலரும் அன்றாட வாழ்வில் பணத்தை சேமிப்பதில்லை. ஆனால், பிச்சை எடுக்கும் மூதாட்டி கூட சிறுக சிறுக ரூ.1 லட்சத்திற்கும் மேல் சேர்த்துள்ளார். இது சேமிப்பிற்கும் வருமானத்திற்கும் தொடர்பில்லை என்பதையே காட்டுகிறது. அதிக வருமானம் இல்லாவிட்டாலும், சீரான ஒழுக்கமே செல்வம் சேர்ப்பதற்கான சாவி என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மிகக் குறைந்த வசதிகளுடன் இருந்தபோதிலும், இந்த மூதாட்டி பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் இந்தப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளார். எவ்வளவு வறுமை இருந்தாலும் மிகச் சிறிய தொகையைச் சேமித்தாலும் கூட அது காலப்போக்கில் பெரிய பணமாக மாறும் என்பதையே இது காட்டுகிறது.