ஒரு புத்தகத்தின் விலை 7 கோடியா? இறந்தவர்களும் படிப்பார்களாமே! என்னடா இது??

Book
Book
Published on

ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்று கூறுவார்கள். அந்த ஒரு புத்தகத்தை வாங்க ஒருவர் 7 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் என்றார் பாருங்களேன்.. அப்படி என்ன அந்தப் புத்தகத்தின் சிறப்பு?

புத்தகம் படிக்காதவர் ஒரே வாழ்க்கை மட்டும்தான் வாழ முடியும். ஆனால், புத்தகம் படிப்பவரால், ஏராளமான வாழ்க்கை வாழ முடியும். டைம் ட்ரேவல் இயந்திரம் இல்லாமலேயே காலத்தை கடந்துச் செல்ல முடியும். அதுவே புத்தகத்தின் சிறப்பு. இந்த சிறப்பு வாய்ந்த புத்தகங்களுக்கு நாம் 50 ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்வோம். அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்து நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்குவோம்.

ஆனால், ஒரு புத்தகத்தை 7 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒருவர்.

பேய் புத்தகம் என்றழைக்கப்படும் Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பேய் புத்தகம் என்று கூறப்படும் இதை வானத்திலிருப்பவர்கள் பலரும் படிப்பதாக ஒரு நம்பிக்கையுண்டு. இந்தப் புத்தகத்தில் ஃபிராங்கன்ஸ்டைன் என்ற கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இளஞ்சிவப்பு நிறம் கொண்ட இந்தப் புத்தகத்தின் முதல் பிரதிகளில் இன்று 3 மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் தற்சமயம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இன்னும் 2 பிரதிகள் நியூயார்க் பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
லண்டனில் லேபர் கட்சி அமோக வெற்றி… தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்!
Book

இந்தப் புத்தகத்திற்கு இத்தனை பில்டப் கொடுத்தாலும். அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் உள்ளது? அந்தப் புத்தகத்தின் கதைதான் என்ன? 19 நூற்றாண்டில் வாழ்ந்த 24 வயதான இளம் பெண் என்னத்தான் எழுதினார்? வானத்தில் இருப்பவர்கள் படிக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது? பேய் புத்தகம் என்று பெயர் வர காரணம் என்ன? போன்ற இத்தனை கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

ஆனால், பதில் தெரிவதற்கு நாமும் 7 கோடி செலவு செய்ய வேண்டும் என்பதால், அதை வாங்கி படித்தவர் கூறும்வரை, நாம் அமைதிக்காக்கவே வேண்டும். வேறு வழியில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com