30 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத பர்கர்… டேய்! என்னடா கலந்தீங்க? 

Burger
Burger
Published on

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட மெக்டொனால்ட் நிறுவனத்தின் பர்கர் சமீபத்தில் கெட்டுப்போகாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த பர்கர் ஏன் கெட்டுப் போகவில்லை? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பர்கரில் என்னென்ன கலக்கிறார்கள் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. 

பர்கர் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது அமெரிக்காதான். ஏனெனில் அங்குதான் இந்த துரித உணவு மிகவும் பிரபலமானது. இப்போது உலகெங்கிலும் பல இடங்களில் பர்கர் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அடுத்ததாக பர்கர் என்றால் நமக்கு McDonald's நிறுவனமும் ஞாபகம் வரும். இந்த நிறுவனத்தின் பர்கர் உலகெங்கிலும் பிரபலம். பொதுவாகவே இந்த நிறுவனத்தின் பர்கர் சில நாட்கள் வரை கெட்டுப் போகாது என்று கூறுவார்கள். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழமையான பர்கர், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பார்ப்பதற்கு நேற்று தயாரித்த பர்கர் போல கெட்டுப்போகாத நிலையில் கிடைத்தது விசித்திரமாகவே உள்ளது. 

கடந்த 1995ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசி டின் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் McDonald's உணவகத்தில் சீஸ் பர்கர் ஒன்றை வாங்கியுள்ளனர். அப்போது நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டதால் இந்த பர்கரை சாப்பிடாமல் அப்படியே விட்டுவிட்டனர். பின்னர் இந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன ஆகும் என தெரிந்து கொள்ள நினைத்தவர்கள், 30 ஆண்டுகள் ஆகியும் அந்த பர்கர் கெட்டுப்போகாததை நினைத்து ஆச்சரியப்படுகின்றனர். இந்த பர்கரை Mc Fossil என்ற பெயரில் அழைக்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
Pink Sauce Pasta: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சூப்பர் உணவு! 
Burger

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதில் எந்தவிதமான நுண்கிருமிகளும் உருவாகவில்லை. மேலும் எந்தவிதமான கெட்ட வாடையும் அதிலிருந்து வரவில்லை. ஆனால் அவர்கள் வாங்கியபோது இருந்த அளவைவிட தற்போது அதன் சைஸ் கொஞ்சம் குறைந்துள்ளது. ஒருவேளை இதை ஃப்ரிட்ஜில் வைத்திருப்பார்களோ? என நினைக்க வேண்டாம். சாதாரணமாக ஒரு கண்டெய்னரில் அடைத்து வீட்டு அலமாரியில் வைத்துள்ளனர். இந்த பர்கரை எலி கூட சாப்பிடவில்லையாம். ஆனால் மனிதர்களாகிய நாம்தான் ருசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த பர்கர் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் இதை ஒருபோதும் நாங்கள் நம்ப மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். 

அது எப்படி திமிங்கலம், இத்தனை வருஷம் ஆகியும் பர்கர் கெட்டுப் போகாம இருக்கும்? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com