அண்ணாமலை மீது 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு! காரணம் என்ன?

Annamalai
Annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கோவை சூலுரில் இரண்டு பிரிவுகளிலும், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடப் போகிறார். அந்தவகையில், நேற்று கோவை ஒண்டிப்புத்தூர் அருகே காமாட்சிபுரத்தில் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

இந்தநிலையில், அண்ணாமலை போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன், பாஜகவினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போதுதான், வாக்குவாதம் செய்ததற்கும், சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கும் தேர்தல் அதிகாரி ஒருவர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், அவருடன் இருந்த 300க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரமான 10 மணிக்கும் மேல் நகர்பகுதியில் ஊர்வலமாகச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அனுமதி இன்றி ஒன்றுகூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிப்பொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற மேலும் 4 பிரிவுகளில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் மொத்தம் 6 சட்டப்பிரிவுகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை தனது X தளத்தில் பதிவிட்டதாவது, “திமுக வேண்டுமென்றே போலீஸார்களை அனுப்பி, சில சாதாரண காரணங்களைக் கூறி, எங்கள் வண்டிகளை வழிமறித்தது. அனுமதி வாங்கிய பகுதிகளில், நாங்கள் எங்கள் வண்டிகளில் செல்லும்போது 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று வண்டிகளை நிறுத்தினார்கள். ஆனால், நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை. வண்டியில் உள்ள விளக்குகளை கூட நாங்கள் நிறுத்திவிட்டுதான் பயணித்தோம்.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் – ஈரான் போர் தொடக்கம்? இஸ்ரேலில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Annamalai

நாங்கள் பாஜக நிர்வாகிகளை சந்திக்கவே அந்த வழியாக சென்றுக்கொண்டிருந்தோம். போலீஸாரிடம் அவர்கள் செய்யும் காரியம் தேர்தல் ஆணையத்தின்  விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று கூற முயற்சித்தோம். ஆனால், அவர்கள் வேறு பாதையில் போகும்படி எங்களை கட்டாயப்படுத்தினார்கள்.” என்று பதிவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com