ஜப்பானில் வேகமாகப் பரவும் கொடிய நோய்… உலக நாடுகள் அச்சம்!

Bacteria
Bacteria

சதையை உண்ணும் பேக்டிரியா நோய் ஜப்பானில் பரவி வருகிறது. இது கொரோனாவை விட பல மடங்கு ஆபத்து விளைவுக்கும் நோய் என்பதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

நாம் பார்த்த கொடிய நோய்களிலேயே மிகவும் கொடூரமானது கொரோனா. உலக நாடுகளில் பெரிய அளவு உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த கொரோனா மக்களை பெரும் அச்சத்தில் தள்ளியது. அந்தவகையில் தற்போது இதைவிடவும் கொடிய நோய் ஒன்று ஜப்பானில் பரவி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

மிகவும் எளிதாக உயிரைப் பறிக்கும் இந்த நோய் சில மாதங்களிலேயே ஜப்பானில் 1000 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்துள்ளது. இந்த நோயை STSS அதாவது Streptococcal Toxic Shock Syndrome  என்று அழைக்கிறார்கள். இந்த பாதிப்பு ஏற்படும் நபருக்குக் குறுகிய காலத்தில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைச் சதை உண்ணும் பாக்டீரியா என்றும் குறிப்பிடுகிறார்கள். இதனால், ஜப்பானின் சுகாதார அதிகாரிகள் ஹை அலர்ட் மோடில் உள்ளனர்.

இந்த STSS நோய் கடந்த ஜூன் 2ம் தேதி வரை ஜப்பானில் 977 பேருக்கு பரவியுள்ளது. இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த பாதிப்பைவிட மிகவும் அதிகம். பாக்டிரியாக்கள் ரத்த ஓட்டத்தில் நுழையும்போது ஆபத்தான ஒரு விஷயத்தை உடலில் பரப்பும். தக்க நேரத்தில் சிகிச்சை இல்லையெனில் உயிரிழக்க நேரிடும். இதில் ஆறுதல் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பாதிப்பு கொண்ட ஒருவரிடம் இருந்து நேரடியாக மற்றொருவருக்கு பரவும் வாய்ப்புகள் குறைவு என்பதே.

இதையும் படியுங்கள்:
உண்மையான உணவைத்தான் நாம் உண்கிறோமோ?
Bacteria

காய்ச்சல், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் முதற்கட்ட அறிகுறிகளாகும். இந்த பாதிப்பு ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த ரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் போது மூட்டு வலி, வீக்கம், திசு இறப்பு, சுவாசப் பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சற்று கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் ஜப்பானில் இருந்து பரவுவதற்குள் அதை தடுத்துவிட்டால், உலக நாடுகளுக்கு பரவாது. இல்லையெனில், வீரியம் அடைய அடைய வேகமாகப் பரவி, பிறகு நாம் மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்க்கொள்ள நேரிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com