தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல நடிகரும் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா கல்லீரலில் பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தமிழில் காதல் கிசுகிசு, அன்பு, வீரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகரும் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா . இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தனர்.

ஐசியு பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா குறித்த தகவல் வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைக் கேட்ட பலரும் விரைவில் பாலா குணமடைய தங்களுடையவாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவரது 3 தம்பிகளில் ஒரு தம்பியாக நடித்திருப்பார் நடிகர் பாலா. கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தின் மூலம் பாலா தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இது குறித்து அவர் கூறியுள்ள தகவலில், ஐசியூ பிரிவில் பாலா சிகிச்சை பெற்றுவந்தாலும் அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாக பாலா , தன்னுடைய ரசிகர்களிடம் தெரிவிக்க சொன்னதாக பாலாவின் மனைவி ,கூறியுள்ளார்.

பாலா தன்னுடைய முதல் மனைவி அம்ரித்தாவிடம் இருந்து கடந்த 2016 ஆம்ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த ஆண்டு எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் திருமணம் ஆன ஒரேவருடத்தில்,எலிசபெத்திடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், நட்பு ரீதியாக இருவரும் நண்பர்களாக உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்ததகவலை தொடர்ந்து பாலாவின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com