திருப்பதியில் பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை வழங்கிய பிரபல நடிகர்!

திருப்பதியில் பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை வழங்கிய பிரபல நடிகர்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திருப்பதியில் பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை ஆகியவற்றை நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி வழங்கினார். அவர் சமீபத்தில் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று திருப்பதி வந்தார். பிச்சைக்காரன் படத்தின் பாதிப்பா என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இயக்கி, இசையமைத்து, எடிட் செய்துள்ள பிச்சைக்காரன் 2 படம் கடந்த மே 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடிப்பு, இயக்கம், இசை என பன்முகக் கலைஞராக இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உருவெடுத்துள்ளார். இருப்பினும் நல்ல வசூலைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதாக கூறப் படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி அவரது தாடை, மூக்கு எலும்புகள் உடைந்து அவர் படுகாயமடைந்த நிலையில், தொடர்ந்து அவர் விபத்திலிருந்து மீண்டு குணமாகி வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் இன்று திருப்பதிக்கு வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். நடிகர் விஜய் ஆண்டனியை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொள்வதற்காக ஏராளமான அளவில் குவிந்து இருந்தனர்

logo
Kalki Online
kalkionline.com