மேற்கு வங்கத்தில், நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து!

train accident
train accident

மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில், நின்றுக் கொண்டிருந்த காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதியதால் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,  30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அப்போது தீடீரென்று வந்த சரக்கு ரயில், நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அதி வேகமாக மோதியத்தில், ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளது.

இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவம் நடந்த இடத்தில் பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்கள், தேசிய பாதுகாப்பு படையினர், ஆம்புலன்ஸ் என தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சிலர் இடர்பாடுகளில் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு  அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. முக்கியமாக சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான், பயணிகள் இருந்த ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளத

இதையும் படியுங்கள்:
மதுரை மக்களை மகிழ்விக்க வருகிறது வந்தே பாரத் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
train accident

மேலும் இந்த விபத்துக் குறித்து, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது x தளத்தில்,   "போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்." என தகவல் வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com