

மக்களின் சேமிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் தபால் துறை பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. தபால் துறை திட்டங்கள் அனைத்தும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான முதலீடுகளாகும். அவற்றுள் மாத வருமானத் திட்டம் (POMIS), தொடர் வைப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற நிறைய சேமிப்பு திட்டங்களை இந்தியன் தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி உங்கள் தேவைக்கேற்ப, மாதாந்திர வருமானம், தொடர் சேமிப்பு அல்லது நீண்டகால சேமிப்பு என பல வகையான திட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ற வகையில் வருடந்திர வட்டி விகிதங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு திட்டத்திற்கும் அதன் சொந்த வட்டி விகிதங்கள், முதலீட்டு வரம்புகள் மற்றும் காலக்கெடு உள்ளன. இந்த திட்டங்கள் குறைந்தபட்ச முதலீட்டில் நல்ல லாபத்தை வழங்குகின்றன.
நீங்கள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பினா எந்த தபால் அலுவலக கிளையிலும் கணக்கு தொடங்க முடியும். அதேபோல் தபால் அலுவலக இணைய வங்கி மூலமாகவும் சேவைகளைப் பெற முடியும்.
நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும், பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களின் சேமிக்கும் கனவை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியன் தபால் துறையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக தொடர் சேமிப்பு அல்லது நீண்டகால சேமிப்பு(recurring deposit scheme) திட்டங்கள் சமானிய மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் சமானிய மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது இந்த தொடர் சேமிப்பு திட்டம். இந்த தொடர் சேமிப்பு திட்டத்தின் மூலம் 5 வருடத்தின் முடிவில் ரூ.2,15,000க்கும் மேல் கிடைக்கும் என்பதால் பலரும் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தபால் துறையில் தொடர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து நீங்கள் தினமும் 100 ரூபாய் சேமித்துக்கொண்டே வந்தால் மாதம் 3000 ரூபாய் வரும். 5 ஆண்டுகளில் மொத்த முதலீடாக ரூ. 1,80,000 தொகை இருக்கும். இதற்கு வட்டியாக மட்டுமே 32,972 ரூபாய் கிடைக்கும். இதன் மூலமாக ரிட்டனாக ரூ. 2,12,972 முதிர்வுத்தொகை கிடைக்கும்.இந்த திட்டத்தில் வருடந்திர வட்டி விகிதம் 6.7 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் மாதம் மாதம் செலுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் பணம் செலுத்தும் வசதி கிடையாது.
தபால் துறையில் குறைந்த சேமிப்பில் அதிக லாபம் கிடைக்கும் இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் சேர்ந்து நாம் சேமித்து வைத்தால் நமக்கு தேவையான காலங்களில் கிடைக்கும் அந்த தொகை நமக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த திட்டம் குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள இந்தியன் தபால் அலுவலகத்திற்கோ, அல்லது தபால் துறையின் இணையதளத்திற்கோ சென்று தேவையான விவரங்களை அறிந்து கொண்ட பின்னர் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெறலாம்.