மெட்ரோ சுரங்கப்பாதை மீது கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலம் அதிசயம் ஆனால் உண்மை. சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுமார் 3.2 கிலோமீட்டர் உயர்மட்ட மேம்பாலம் சுமார் 621 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் இந்த வேலை நடைபெற்று வருகிறது. 2024 இல் இந்தப் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பாலத்தின் அடியில் இரண்டு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை உள்ளது.
அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த உயர்மட்ட பாலம் அமைகிறது. சுரங்கப்பாதை இருப்பதால் அதிக ஆழம் தோண்டாமல் குறைந்த ஆழத்தில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை ஐஐடி பிரிட்டன் ஜெர்மனி தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த மேம்பால பணியை ஏற்று நடத்தி வருகின்றனர்.
பாலத்தின் அழுத்தம் குறையாமல் இரும்பால் ஆன கட்டமைப்புகள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிளாக் சிஸ் 3d என்ற மென்பொருள் வாயிலாக தனி மாதிரி உருவாக்கப்பட்டது. சாலை மட்டத்தில் இருந்து ஏழு முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் சிறு துளைகள் அமைத்து, அதில் தூண்கள் மைக்ரோ பைலில் முறையில் அமைக்கப்படுகிறது. தலையில் தூண்கள் பகுதியில் எக்கு பயன்படுத்தப்படுகிறது. சராசரி பாலங்களை விட அதிக செலவில் இது உருவாக்கப்பட்டு வருகிறது.
வழக்கத்தை விட 50 சதவீதம் அதிக செலவாகும். இந்த மேம்பாலத்துக்கு அடியில் 2.48 கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டு மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் எந்த சேதாரமும் இன்றி கட்டப்படுகிறது. இதற்காக Micro pilling machine பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பால வேலை முடிந்தால் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை பத்து நிமிடத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் செல்லலாம்.
எஸ் ஐ இ டி சாலை, சென டாப் சாலை, நந்தனம் சிஐடி நகர், ஜோன்ஸ் சாலை இவற்றில் போக்குவரத்து நெருக்கடி குறையும். இந்தப் பாலம் அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 195 கோடி செலவாகிறது. இந்த மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக அமைய உள்ளது.
ஆறு வழிப் பாதையில் மூன்று இடங்களில் ஏரி இறங்கும் வசதியும் செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை மீது கட்டப்படும் உயர்மட்ட பாலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடைகிறது. மிகவும் காஸ்ட்லியான பாலமாகவும், அதே சமயத்தில் மெட்ரோ ரயில் சுரங்க பாதைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பெரிய சவாலாக இந்த பாலம் அமைந்து வருகிறது.