பல்வேறு நோய்களை விரட்டும் கருஞ்சீரகம்: அதன் மருத்துவப் பயன்கள்!

Black cumin repels diseases
Black cumin
Published on

ருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும். ஆங்கிலத்தில் பிளாக் குமின் என்பார்கள். இதன் தாவரவியல் பெயர் நிஜல்லா சடிவா. மூலிகையின் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியா நாடுகள் ஆகும்.

நாடுகள் ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த செடியின் காய்கனியில் இருந்து வெளிப்படும் விதை மூலிகையாக பயன்படுகிறது.

அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை அதிக அளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை. யுனானி மருத்துவத்திலும் கருஞ்சீரக எண்ணெய் சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கசப்புதன்மை கொண்ட கருஞ்சீரக விதைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. கருஞ்சீரகத்தை சித்த மருத்துவம் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி சாப்பிடலாம்.

அதன் பயன்கள்

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு வரும் வலி சோர்வு போன்றவை நீங்க கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து கொடுக்கலாம். தவிர தாய்ப்பால்நன்றாக சுரக்கும் கருப்பையை இயல்பு நிலைக்கு மாற்றும். பிரசவத்திற்கு பின் கருப்பையில் சேரும் அழுக்குகளை நீக்க ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

குழந்தை பெற்ற மூன்றாம் நாளில் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டும்.

சரும நோய்கள்

சரும நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறப்பான மருந்தாகும்.

கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் நல்ல குணமாகும்.

இதையும் படியுங்கள்:
வினோத குணாதிசயங்களைக் கொண்ட 8 வகை ராட்சத எறும்புகள்!
Black cumin repels diseases

மூக்கடைப்பு நீங்க

கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து குடித்தால் மூச்சு முட்டல் நீங்கும். மழை குளிர்காலத்தில் பாடாயப்படுத்தும் மூக்கடைப்பு நோய்க்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை 50 மில்லி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடாக்கி ஆறியபின் அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும்.

இருமல் - விக்கல்

தொடர் இருமலில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது, தேன் சேர்த்து கலந்து சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை அகற்றும். கருஞ்சீரகத்தை பொடித்து மோருடன் கலந்து குடித்தால் விக்கல் நீங்கும்.

பித்தப்பை கல் அகல

ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை வெந்நீர் அல்லது தேன் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகினால் சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களும் படிப்படியாக கரையும்.

மாதவிலக்கு பிரச்னை

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கு ஒன்று முதல் மூன்று கிராம் அளவு கருஞ்சீரக பொடியை, தேன் அல்லது கருப்பு கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்காக ஏற்படும். இதனால் ஏற்படும் மாதவிடாய் தொடங்கும் தேதி பத்து நாட்கள் முன்பிருந்தே சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, இரத்தப்போக்கு, அடி வயிறு கனம், சிறுநீர்கழிக்க சிரமப்படுதல் போன்றவை நீங்கும்.

நீரிழிவு குணமாக

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கொதிக்க வைத்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பல்வேறு பறவைகள் சரணாலயங்கள் ஒரு பார்வை!
Black cumin repels diseases

தலைவலி மூட்டு வலி நீங்க

கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலை, நெற்றி பகுதியிலும் மூட்டுவலி உள்ள இடத்திலும் பூசினால் வலி படிப்படியாக நீங்கும்.

கருஞ்சீரக வலிக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள், கருத்தரிக்க விரும்புவர்கள் பயன்படுத்தக்கூடாது ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்கவேண்டும். எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். பொதுவாக சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் இது ஆயுள் காக்கும் மருந்து என்பது எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com