சிறைக்குச் சென்ற வழக்கறிஞருக்கு அமைச்சர் பதவி… தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்!

Thailand Prime Minister
Thailand Prime Minister
Published on

இப்போதுதான் வங்கதேசத்தில் பெரியளவு போராட்டம் வெடித்து பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது தாய்லாந்திலும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சென்ற ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மூவ் ஃபார்வட் கட்சி வெற்றிபெற்றதையடுத்து, அந்தக் கட்சியை அமைக்கவிடாமல், ஸ்ரேதத்தாத விசினின் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் இந்த ஆட்சி, அரச குடும்பத்தினருக்கு தலையாட்டும் பொம்மையாக இருந்து  வருகிறது. இதனை கடுமையாக எதிர்த்து மூவ் ஃபார்வட் கட்சி குரல் எழுப்பியது. இதனையடுத்து கடந்த வாரம் மூவ் பார்வார்ட் கட்சியை கலைக்க வேண்டும் என்கிற அதிர்ச்சி உத்தரவை அரசியல் சாசன நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும் அந்தக் கட்சிக்கு பதிலாக ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பெயர் மக்கள் கட்சி ஆகும். இப்படி  தவிசின் கட்சி அனைத்துப் பக்கத்திலும் மற்றவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தாய்லாந்து நாட்டின் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் திடீரென தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சிறைக்கு சென்று வந்த வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவிக் கொடுத்த விவகாரத்தில் தாய்லாந்து பிரதமர் வழக்கில் சிக்கினார். அவருக்கு எதிராக அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மனைவியின் சிலை.. வெடித்தது சர்ச்சை… மார்க் ஜூகர்பெர்கின் கலை ஆர்வம்?
Thailand Prime Minister

இந்த வழக்கை விசாரிக்கையில், அவர் அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதை உறுதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் தவிசின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அந்நாட்டின் ஆளும் கட்சி எம்பிக்கள் ஒன்று கூடி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

சமீபத்தில்தான் வங்கதேசத்தில் மத வன்முறையாளர்களால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இழந்தார். அத்துடன் உயிருக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து தாய்லாந்திலும் பிரதமர் பதவியிலிருந்து தவிசின் நீக்கப்பட்டது உலக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com