சமூக ஊடகங்களின் அரசனாக போற்றப்படும் மார்க் ஜுகர்பெர்கின் வாழ்க்கை தொழில்நுட்ப உலகிற்கு மட்டுமின்றி, கலை ஆர்வலர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தை தந்துள்ளது. தனது மனைவியின் உருவத்தை ரோமன் பாரம்பரிய முறையில் சிலையாக வடித்து வீட்டுக்கு கொள்ளைப் புறத்தில் வைத்தது, உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோமன் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த சிற்பத்தை உருவாக்கியதாக மார்க் ஜுச்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த செயல் கலை உலகில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒரு பில்லினியர் தனது தனிப்பட்ட விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்துவதில் உள்ள அர்த்தம் என்ன? வாருங்கள் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பாரம்பரிய மீட்டெடுப்பா, வணிக நோக்கமா?
ஜூக்கர் பெர்க்கின் இந்த செயல் ரோமன் காலத்து கலை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அவர் குறிப்பிட்டாலும், இதில் பல கேள்விகள் எழுகின்றன. ஒரு பில்லியனர் ஏன் தனது மனைவியின் உருவத்தை சிற்பமாக வடிவமைக்க வேண்டும்? இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன? சிலர் இது வெறும் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் ஜூக்கர்பெர்க்கின் சமூக ஊடகங்களில் உள்ள செல்வாக்கு அவரது செயல்களின் மீதான கவனத்தை கருத்தில் கொள்ளும்போது, இதில் ஒரு வணிக நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த செயல் கலை உலகில் பல விவாதங்களைத் தூண்டியுள்ளது. சில கலைஞர்கள் ஜூக்கர் பெர்கின் இந்த செயல் கலையை ஒரு பொருளாக பார்ப்பதாக விமர்சிக்கின்றனர். பணம் இருந்தால் யாரும் தனது விருப்பப்படி கலை படைப்புகளை உருவாக்கி அதை பொதுவெளியில் நிறுவலாம் என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளது. ஆனால், சிலர் கலை என்பது தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இருக்கலாம் என்றும், ஜூக்கர் பெர்கின் இந்த செயல் கலையை பற்றிய புதிய விவாதங்களை தூண்டியுள்ளது என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால், அதற்கான உண்மை காரணம் என்ன என்பது மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு மட்டுமே தெரியும். இதன் பின்னால் இருப்பது கலையோ, விளம்பரமோ? எதுவாக இருந்தாலும் சராசரி நபர்களுக்கு இது எந்த அளவுக்கு உபயோகப்படும் என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. பணம் படைத்தவர்கள் ஆயிரம் செய்வார்கள். பணம் இல்லாதவர்கள் இவற்றை செய்தியாக மட்டுமே படிக்க முடியும். இவை நம் வாழ்வில் எந்த அளவுக்கு உபயோகப்படும் என்று தெரியவில்லை.