27 நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு… மீண்டும் மீண்டுமா??

New type Corona
New type Corona
Published on

உலக நாடுகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, தற்போது புதிய வகையில் உருமாறி 27 நாடுகளில் பரவி வருவதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொற்று கொரோனா. ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை, பெரும் அளவில் பலி எண்ணிக்கை என அனைத்துவிதத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவால் உலக நாடுகள் பெரும் அவதிக்குள்ளாகின. சில வெளிநாடுகளில் கொத்து கொத்தாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. அந்தளவுக்கு பெரிய அழிவரக்கனாக விளங்கிய கொரோனா மீண்டும் 27 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எக்ஸ்இசி (XEC) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது.  முதன்முதலில் இந்த கொரோனா ஜுன் மாதத்தில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

இந்த வகை கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3 கண்டங்களில் பரவியிருக்கிறது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொடங்கியது ஏழரை!
New type Corona

இதன் அறிகுறிகள் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி ஆகியவையாகும். புதிய வகை கொரோனா ஒமைக்கிரான் துணை வகைகளின் கலப்பினமாகும். தீவிரத்தன்மையின் அடிப்படையில் இது மிகவும் ஆபத்தானது அல்ல என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்து இல்லை என்றாலும், குறுகிய காலத்தில் 3 கண்டங்களில் உள்ள 27 நாடுகளுக்குப் பரவியதால், இதைத் தடுக்கமுடியாமல் போனால், விரைவில் அதிக நாடுகளுக்கு பரவும் என்று எச்சரிக்கைவிடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com